சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலக்சன் ரிசல்ட் நெருங்க நெருங்க.. 'கையை' உதறித் தள்ளுகிறதா அண்ணா அறிவாலயம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    முக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி-வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விலகியிருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது திமுக.

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தது திமுக. இதனை பிற கட்சிகள் ஏற்காத நிலையிலும் ராகுலே பிரதமர் வேட்பாளர் என திட்டவட்டமாக கூறியது திமுக.

    அதேநேரத்தில் திமுகவின் புதிய டெல்லி முகங்கள் பாஜக தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜகவை நிச்சயம் ஆதரிப்போம் என மத்திய அரசுக்கு நெருக்கமான சாமியாரிடம் வாக்குறுதியும் அளித்தது திமுக.

    யார் ஜெயிக்கப் போறாங்களோ.. எது நடக்கப் போகுதோ இல்லையோ.. இருக்கு.. இது மட்டும் கண்டிப்பா இருக்கு! யார் ஜெயிக்கப் போறாங்களோ.. எது நடக்கப் போகுதோ இல்லையோ.. இருக்கு.. இது மட்டும் கண்டிப்பா இருக்கு!

    யாருக்ககு திமுக ஆதரவு?

    யாருக்ககு திமுக ஆதரவு?

    இதனால்தான் பாஜகவுடன் திமுக பேசி வருகிறது என உண்மையை போட்டு உடைத்தார் தமிழிசை. இதை திமுக தலைமை மறுத்த போதும், பிரதமர் பதவிக்கு மோடி அல்லாத வேறு ஒருவரை பாஜக முன்னிறுத்தால் நிச்சயம் அக்கட்சி ஆதரிக்கவே வாய்ப்பிருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது.

    திமுகவுக்கு அதிக இடங்கள்

    திமுகவுக்கு அதிக இடங்கள்

    இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிக இடங்களை திமுக கைப்பற்றும் என்றும் அந்த முடிவுகள் தெரிவித்தன.

    ஸ்டாலின் பேட்டி

    ஸ்டாலின் பேட்டி

    இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். அவரது பேட்டியானாது காங்கிரஸிடம் இருந்து திமுக விலகியிருப்பதாக வெளிப்படுத்துவது போல்தான் இருந்தது. அடுத்த மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்குமா? என்ற கேள்விக்கு 23-ந் தேதிக்குப் பிறகு விளக்கம் தருகிறேன் என பட்டும்படாமலும் பதில் தந்தார் ஸ்டாலின்.

    பட்டும் படாத பதில்

    பட்டும் படாத பதில்

    டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்திரபாபு நாயுடு படுதீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறார். இது தொடர்பான கேள்விக்கும், சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பேசி வருகிறார் என ஒரு முக்கியத்தும் தராத பதிலையே ஸ்டாலின் வெளிப்படுத்தினார். சோனியா காந்தி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டியிருப்பது பற்றிய கேள்விக்கும் கூட 23-ந் தேதிக்குப் பிறகு கூட்டத்தை கூட்டுவதுதான் பயனளிக்கும் என மேலோட்டமான பதிலை மட்டும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் இன்றைய பேட்டி ஒரு திட்டவட்டமானதாக இல்லாமல், பாஜக அணியிலும் திமுக துண்டு போட்டு வைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில்தான் இருந்தது.

    English summary
    DMK's Strategy showed it wants to keep distance From Congress lead UPA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X