டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் மாநில அரசியலில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. நிதி ஆதாரம் மற்றும் கல்வித் திட்டங்கள் தொடர்பாக அவர் மேற்கொள்ளும் இந்த முக்கிய சந்திப்புகள், புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுத்துள்ளன.. குறிப்பாக தற்போதைய சூழலில் திமுக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த டெல்லி பயணம் தவெக அரசுக்கு ஏதேனும் புதிய நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற விவாதம் தற்பொழுது எழுந்துள்ளது..
மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பேசும்போது, "பெரிய அளவிலான நிதி ஆதாரங்களுக்கு நாம் எப்போதும் மத்திய அரசைத்தான் நம்பி இருக்கிறோம்.. எனவே, மாநிலத்தில் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் முதலில் டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்திப்பது வழக்கம்.

தவெக அரசு
இது ஒரு முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.. அதன் பிறகு விஜய் அவர்கள் என்னென்ன கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்களிடம் கொடுக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.. மத்திய அரசின் தரப்பிலிருந்தும் சில திட்டங்களை செய்யச் சொல்வார்கள்.. அதை அவர் எந்த அளவுக்கு செய்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்த டெல்லி பயணத்தின் அரசியல் ரீதியான பகுதியை எடுத்துக்கொண்டால், அவர் ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார்.. இப்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்த அரசு 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவோடுதான் இயங்குகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.. அதனால் நாம் இதையும் இன்றைக்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு
பிரதமருடனான சந்திப்பும் பிளஸ் ராகுல் காந்தியுடனான சந்திப்பும் ஒரு நல்ல முயற்சி என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.. இந்த சந்திப்புகளால் தற்போதைக்குத் தமிழ்நாடு அரசியலில் ஏதேனும் நெருடல்கள் ஏற்படுமா என்றால், அப்படியே ஒன்னும் இப்போதைக்கு இருக்காது..
நிச்சயமாக காங்கிரஸ் ஆதரவோடு இந்த அரசு தொடர்வதை பாஜாகவோ அல்லது மோடியோ விரும்ப மாட்டார்கள். இப்போதைக்கு அவர்கள் விஜய் அரசை டிஸ்டர்ப் பண்ண மாட்டார்கள்.. ஏன் தெரியுமா? அவர்களுக்கு இதன் மூலம் இன்னொரு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது..
தனித்து விடப்பட்ட திமுக
இன்றைக்கு திமுக முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.. பாஜக எதிர்ப்பில் ஊறி வளர்ந்த மற்றும் கடந்த இரண்டு மாநில மக்களவை தேர்தல்களில் பாஜக படுதோல்வியைத் தழுவுவதற்குக் காரணமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது.. திமுக ஆட்சியை மட்டும் இழக்கவில்லை, தன் கூட்டணிக் கட்சிகளை முற்றிலுமாக இழந்து இன்று தனிமரமாக நின்று கொண்டிருக்கிறது.. இது இன்றைக்கு பாஜகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
ஒரு பிரதான எதிரியை இன்றைக்கு ஓரங்கட்டியாகிவிட்டது, இன்னொருவர் புதிதாக வந்திருக்கிறார் அவரைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்றுதான் பாஜக நினைக்கிறது.
கொஞ்ச நாள் பொறுத்து கண்டிப்பாக தங்கள் அரசியல் நகர்வுகளை பாஜக ஆரம்பிப்பார்கள்.. அந்த 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களை கூட்டணியில் இருந்து கழற்ற சொல்வார்கள் அல்லது வேறு மாதிரி நெருக்கடிகள் கொடுப்பார்கள்.. ஆனால் அதெல்லாம் காலப்போக்கில்தான் நடக்கும்.. எப்படியும் 2 ஆண்டுகளுக்கு, குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது இந்த அரசுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்றே நினைக்கிறேன்..
பிஎம்ஸ்ரீ கல்வித் திட்டம்
அதேபோல மத்திய அமைச்சர்களையும் பிரதமரையும் விஜய் இன்று சந்திக்கும்போது அவர்கள் பிஎம் ஸ்ரீ (PM Shri) கல்வித் திட்டத்தைக் கோடிட்டுக் காட்டுவார்கள்.. மத்திய அரசு அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் சந்தித்துப் பேசும் பொழுது, இந்த பிஎம் ஸ்ரீ திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய்யிடம் பிரதமரும் வலியுறுத்துவார், உள்துறை அமைச்சரும் வலியுறுத்துவார்.. சிபி ராதாகிருஷ்ணனும் வலியுறுத்துவார்.. நிர்மலா சீதாராமனை நிதி விவகாரங்கள் சம்பந்தமாகச் சந்திக்கும்போது அவரும் இதையே வலியுறுத்துவார்..
இதில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்றுதான் தெரியவில்லை.. அவர் அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்வாரா என்று புரியவில்லை.. ஏனென்றால் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்ற பிறகு வந்த சிவதாஸ் மீனா, அன்றைக்கு கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அனுமதியோடுதான், "தமிழகம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேரத் தயாராக இருக்கிறது" என்ற தொனியில் தெளிவாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அது பெரிய சர்ச்சையாக மாறிய உடனே திமுக அப்படியே பல்ட்டி அடித்தது.
பாஜக ஹேப்பி
ஒருவேளை ஸ்டாலினே 2வது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருந்தால், அவர் கண்டிப்பாக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்துப் போட்டிருப்பார்.. கேரளாவில் கூட அவர்கள் கிட்டத்தட்ட நெருங்கி வந்து கையெழுத்து போட்டுவிட்டார்கள்.. இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் இதில் போட்டுவிட்டன.. தமிழ்நாடு மட்டும் தனித் தீவாக இயங்க முடியாது.. எனவே விஜய் எல்லா விஷயத்திலும் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் விஜய் அரசு சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத்தான் எனக்குத் தகவல்கள் வருகின்றன.. எனினும் உறுதியாகச் சொல்ல முடியாது.. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் முதல் டெல்லி பயணம் இது.. நிச்சயமாக அவர் மிகவும் பிராக்டிகலாக, நடைமுறைக்கு ஏற்றவாறு மத்திய அரசுடனான தனது அணுகுமுறையை வைத்திருப்பார் என்றே தெரிகிறது" என்றெல்லாம் தெரிவித்தார்.
-
தூக்கப்படும் சீனியர்கள்? துண்டாகும் மாவட்டங்கள்? ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்கெட்ச்! 78 டூ 100 திமுக பிளான் -
"பாடினதுக்கு கைது பண்ணுறாங்கய்யா!" அமைச்சர் வன்னி அரசுவிடம் பாடகர் வேடன் வேதனை.. பின்னணி சம்பவம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications