சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை...துரைமுருகன் விளாசல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சியை பற்றியோ, மறைந்த கலைஞரை பற்றியோ விமர்சனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியுமில்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீர் மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

dmk treasurer duraimurugan statement about answer to cm

பொதுப்பணித்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சர், அந்த துறையை நிர்வகிப்பதைக் கண்டு தமிழக மக்கள் வெட்கமும், வேதனையும் கொள்வதாக கூறியிருக்கிறார். கமிஷன் கலாச்சாரத்தில் முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமைந்தது தமிழகத்திற்கு கெட்ட வாய்ப்பு என விமர்சித்திருக்கிறார்.

விடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்புவிடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு

1967 முதல் 2011 வரை 41-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி தமிழகத்தின் நீர்மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியவர் கருணாநிதி என்றும், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலை தெரிந்து கொள்ளாமல் ஆணவத்தில் அடம்பிடித்து எடுத்தேன், கவிழ்த்தேன் என எடுத்தெறிந்து பேசுவது அடாத காரியம் என துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா வரலாற்றில் முதன்முறையாக 378 தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட சாதனையும் திமுக ஆட்சி உருவாக்கியது என்றும், 3,117 ஏரிகள், 534 அணைக்கட்டுகளை புதுப்பித்து சீரமைத்ததும் திமுக ஆட்சியில் தான் என துரைமுருகன் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

English summary
dmk treasurer duraimurugan statement about answer to cm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X