"மதர் ஆஃப் ஆல் சர்வே".. திமுக, அதிமுக, தவெக அடுத்தடுத்து பிரம்மாண்ட சம்பவம்! யாருக்கு சான்ஸ்?
சென்னை: ஆளும் திமுக, எதிர்கட்சியான அதிமுக மற்றும் தவெக என்று எல்லா கட்சிகளும் அடுத்தடுத்து முக்கியமான சில சர்வேக்களை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக தேர்தல் நேரத்தில் கட்சிகள் சர்வேக்களை எடுப்பது வழக்கம். முக்கியமாக அதிக பணம் பலம், படைபலம் கொண்ட கட்சிகள் எளிதாக சர்வேக்கள் எடுக்கும். அந்த வகையில்தான் மதர் ஆப் ஆல் சர்வே என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகள் அடுத்தடுத்து சில சர்வேக்களை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக சர்வே: தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக 3 விதமான சர்வேக்களை எடுக்க முடிவு செய்துள்ளதாம்.
1. உளவுத்துறை சார்பாக எடுக்கப்படும் சர்வே. இதுதான் பொதுவாக துல்லியமான சர்வே ஆகும். முக்கியமாக கட்சியின் வெற்றிவாய்ப்பு, ஏற்கனவே உள்ள எம்எல்ஏக்கள் வெற்றி வாய்ப்பு, எதிர்க்கட்சிகளின் பலம், கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல் என்று பல்வேறு விவரங்கள் இந்த சர்வே மூலம் எடுக்கப்படும்.
2. இரண்டாவதாக சில தனியார் அமைப்புகள் மூலம் நடத்தப்படும் வேட்பாளர், ஜாதி, திட்டம், பாலின ரீதியிலான சர்வே. மண்டல வாரியாக இது எடுக்கப்படும்.
3. பென் உள்ளிட்ட அமைப்பு மூலம் எடுக்கப்படும் சர்வே. இந்த சர்வே கட்சியின் வேட்பாளர்களை, வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளை உறுதி செய்யும் சர்வே ஆகும். இதுதான் கிட்டதட்ட பைன்ல்ஸ் சர்வே போல இருக்கும்.
அதிமுக சர்வே; அதிமுக சார்பாக இன்னொரு சர்வே எடுக்கப்பட உள்ளது. அதிமுக தரப்பு தங்களுக்கு எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று சர்வே எடுக்க உள்ளனர். தொகுதி வாரியாக, எம்எல்ஏ வாரியாக, மண்டல வாரியாக சர்வே எடுக்க முடிவு செய்துள்ளனர்.
4. ஏற்கனவே விஜய் தவெகவிற்காக சர்வே எடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு நினைத்ததை விட கிரவுண்டில் அதிக சப்போர்ட் இருப்பதாக சர்வே ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம். அந்த சர்வேயில் விஜய்க்கு ஆதரவாக நிறைய தகவல்கள் இடம்பெற்று உள்ளதாம்.
இது தவெக மூலம் எடுக்கப்பட்ட இன்டர்னல் சர்வே ஆகும். விஜயை குஷியில் ஆழ்த்தும் அளவிற்கு சர்வேயில் இடம்பெற்ற தகவல்கள் என்னென்ன.. அவருக்கு எங்கெல்லாம் ஆதரவு இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
1. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 30% வாக்குப்பங்கைப் பெறுவோம் என்றும், மக்கள் விஜய்யை முதல்வராக விரும்புகிறார்கள் எனவும் உட்கட்சி ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டுள்ளது. அதாவது அந்த கட்சி சார்பாக நடத்தப்பட்ட உட்கட்சி சர்வேயில் இந்த முடிவுகள் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
2. உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.
3. 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தி.மு.க. 32.9% ஆதரவுடன் முன்னணி வகிக்க, தொடர்ந்து த.வெ.க. 31.7% மற்றும் அ.தி.மு.க. 27.3% ஆதரவை பெற்றன. 8.1% பேர் மற்ற கட்சிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
4. இப்போது கடைசியாக இன்னொரு முக்கியமான சர்வேவை எடுக்க முடிவு செய்துள்ளனர். கட்சியின் உண்மையான பலத்தை நிரூபிக்கும் விதமாக இந்த சர்வே இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications