எளியோர் எழுச்சி நாள்.. துபாயில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா! கலக்கும் அமீரக உடன்பிறப்புகள்!
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி துபாயில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய அமைப்பாளர் மீரான் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை பிறந்தநாள் காண்கிறார். இதை அடுத்து அவரது பிறந்த நாளை கொண்டாட திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

உதயநிதி உதய நாள் விழா, எளியோர் எழுச்சி நாள் விழா என்ற பெயர்களில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. மேலும் தமிழக முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
அந்த வகையில் துபாயில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது அமீரக திமுக சார்பில், தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டின் பேரில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. துபாய், தேரா, அல்குரையூர் சென்டர் அருகே லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டல் இந்த நிகழ்ச்சி 27ஆம் தேதி புதன்கிழமை மாலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் துபாய் அரசின் துபாய் பொருளாதார சர்வதேச சந்தை விரிவாக்கம் துறையின் முதுநிலை மேலாளர், உமர் முகமது அலி கஃபேலி கலந்து கொள்ளவுள்ளார். மேலும் 'என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மோகநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் துபாய் வாழ் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
முதல் பிறந்த நாள்: திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது.
ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி சில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து பல மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது.
இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதனையடுத்து முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தனது பிறந்த நாளுக்கு ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
துபாயின் 29வது மாடியில் நம்ம லால் ஏட்டன்.. மனைவிக்காக வாங்கிய மிரட்டலான கிப்ட்.. விலை இத்தனை கோடியா?












Click it and Unblock the Notifications