Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெட்கப்பட்ட உதயநிதி.. பாராட்டிய ஸ்டாலின்.. "ஒரு சிறு கண்ணசைவு போதுமே".. முதல் பேச்சிலேயே வியந்த சபை

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று உரையாற்றினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முதல்முதலாக தன்னுடைய கன்னி பேச்சை சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்தார்.. அப்போது உதயநிதி, தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகளையும் விடுத்தார்.

சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இன்று பேரவையில் உரையாற்றினார்.. அப்போது தன்னுடைய வெற்றிக்காக உதவிய தலைவர்கள், மா.செ.க்கள் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தனித்தனியாக உரித்தாக்கினார்.

மேலும் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பியதுடன் மிக முக்கியமான தமிழக பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.. அத்துடன் ஆளும் அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.. உதயநிதி பேச்சின் சுருக்கம்தான் இது:

கலைஞர்

கலைஞர்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரை வணங்கி எனது முதல் சட்டப்பேரவை உரையை தொடங்குகிறேன்.. முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் இருந்த அன்பில் தர்மலிங்கம் தாத்தா, அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்கு பிறகு, இன்று என்னுடைய நண்பனாக, தேர்தல் பணி, கழக பணி என்று தோளோடு தோள் நிற்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..

ஆட்சி

ஆட்சி

ஜெயலலிதா அம்மையார் மறைந்தவுடன், திலைவர் நினைத்திருந்தால், என்றோ ஆட்சி அமைத்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயக வழியில் மக்களை சந்தித்து, மக்களின் வாக்குகளை பெற்றுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தலைவர் பொறுமை காத்தார்..

 கருணாநிதி

கருணாநிதி

அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில், தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கடைசி ஆசையைகூட நிறைவேற்ற விடாமல் அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டது.. தலைவர் அப்போது ஒரு சிறு கண்ணசைவு காட்டியிருந்தால்கூட, அன்று நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.. ஆனால், தலைவர் அப்படி செய்யவில்லை.. சட்டப்போராட்டம் நடத்தி, கலைஞரின் விருப்பத்தையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்றினார்.

மித்ரா

மித்ரா

தமிழகத்தில் கடைகோடி மனிதனுக்கு ஒரு பிரச்சனை என்றாலும், ஒட்டுமொத்த தமிழகத்துக்கே பிரச்சனை என்றாலும் முதல்வர் அதில் கவனம் செலுத்தி தீர்வு கண்டு வருகிறார்.. உதாரணத்துக்கு நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவின் அறுவை சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் தேவை என்றதும், அதற்காக உதவ வேண்டும் என்றும் மருத்துவ சிகிச்சைக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஒரு கோரிக்கை வைத்தார்... இறுதியில் பலரும் நிதி அளித்ததாலும், ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டதாலும், மருந்து கிடைத்து, மித்ராவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

 அண்ணா

அண்ணா

சேப்பாக்கம் தொகுதியின் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற பெண்களுக்காக பெண்களே இயக்கும் கூட்டுறவு கடன் சங்க வங்கிகளை ஏற்படுத்த வேண்டும்.. சேப்பாக்கம் 4 இடங்களில் கட்டப்படவுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர்-மாண்புமிகு முதல்வரின் பெயர்களை சூட்டி, அவர்களின் பொதுவாழ்வை பிரதிபலிக்கும் வகையில் அவற்றை வடிவமைக்க வேண்டும்.

 சிங்கார சென்னை

சிங்கார சென்னை

கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்துக்கு என்று எந்த ஒரு திட்டமும் அவர்கள் செயல்படுத்தவில்லை.. இந்த சூழலில் முதல்வர், அன்று மேயராக இருந்தபோது அறிமுகப்படுத்திய சிங்கார சென்னை திட்டமானது, தற்போது சிங்கார சென்னை 2.0 ஆக செயல்பட போகிறது.. சென்னையில் இனி இது மேலும் எழில்நகராமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 தனி பட்ஜெட்

தனி பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு அண்ணன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.. அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அறிவிப்பும் திட்டமும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்து, தமிழக அரசை பாராட்டி உள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது கலைஞர் கொண்டு வந்த திட்டம்.. அந்த திட்டம் இன்னும் ஆற்றலுடன் தொடர, வேளாண் பட்ஜெட்டில் ரூ.4508.2 கோடி செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. கரும்பு விவசாயிகளுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது வரவேற்கத்தக்கது.

Recommended Video

    விரைவில் குடிசையில்லாத தொகுதியாக சேப்பாக்கம் மாறும் | TRB Raja | Oneindia Tamil
     நீட் தேர்வு

    நீட் தேர்வு

    நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். இதில் கட்சி பேதம் எதுவுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும்.

     கொரோனா

    கொரோனா

    கொரோனாவை விரட்டுவதில் ஒன்றிய நரேந்திர மோடி அரசு மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது. ஒன்றிய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யும் அடிமை அதிமுக அரசு, ஒன்றிய அரசு கூறியதை போல் மணியடித்தது, கைத்தட்டி, ஒலியெழுப்பி கொரோனாவை விரட்டியதாக எண்ணி மூட நம்பிக்கையுடன் செயல்பட்டன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போதைய கழக அரசு விழிப்புடன் செயல்பட்டது.

     பெண்கள்

    பெண்கள்

    புற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.. அயோதிக்குப்பம், நடுக்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்திற்கு பெண்களுக்கு என தனி கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும்.
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலவச தொலைக்காட்சியை. கலைஞர் தொலைக்காட்சி என்றுதான் சொல்லி வந்தார்கள். இன்று திமுக வந்தவுடன் மாநகர பேருந்து பெண்கள் இலவசமாக செல்வதால் தற்போது ஸ்டாலின் பேருந்து என்று தற்போது சொல்லி வருகிறார்கள்.

     பங்கேற்பாளன்

    பங்கேற்பாளன்

    சட்டப்பேரவை நடவடிக்கைகளை இதுநாள் வரை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனித்து வந்த நான், முதல் முறையாக ஒரு பங்கேற்பாளனாக அவையிலிருந்து செயலாற்றும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன். பாரம்பரியமிக்க இந்த அவையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவேன்" என்றார்.

     ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "எனக்கு முன்னால் கன்னிப்பேச்சை, பல வினாக்களை தொடுத்து, கோரிக்கைகளையும் வைத்து மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்கள்.. எனவே, அவர் முன்வைத்த பிரச்சனைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மான்ய கோரிக்கை விவாதத்தின்போது, அதற்குரிய விளக்கங்கள் தரலாம்..

     பாகுபாடு

    பாகுபாடு

    ஆனால், மிக முக்கியமான பிரச்சனை நீட்.. அதை அழுத்தமாக அவர் குறிப்பிட்டு சொன்னார்.. நீட்டை பொறுத்தவரை கட்சி பாகுபாடுகளை மறந்து எல்லாரும் ஒன்று சேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.." என்றார். ஸ்டாலின் உதயநிதியின் பெயரை குறிப்பிட்டு இப்படி பேசியதுமே, பின்சீட்டில் உட்கார்ந்திருந்த உதயநிதி வெட்கப்பட்டு சிரித்தார்.. அதை பார்த்து அவருக்கு அருகில் இருந்தோரும் புன்முறுவல் பூத்தனர்...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+