"ஆட்சியில் பங்கு" விசிக கொடுத்த ட்விஸ்ட்.. காங்கிரஸ் கட்சிக்கு திமுக வைத்த மறைமுக செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை 2026 சட்டசபைத் தேர்தலில் நிபந்தனையாக வைக்க மாட்டோம் என்று விசிக அறிவித்திருப்பது, திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பேசி வந்த நிலையில், விசிகவின் இந்த நகர்வு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

விக்கிரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், எங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுப்போம் என்று அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. ஏனென்றால் விசிகவின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதாகும்.

DMK vs Congress

இதனால் திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கினர். மதிமுக எம்பி துரை வைகோவும் இதே கோரிக்கையை பேசி வந்தார். அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் கோரிக்கையும் இதுதான் என்று பேச தொடங்கின.

இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இது புதிய நெருக்கடியை உருவாக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த சூழலில், 2026 சட்டசபைத் தேர்தலில் விசிக ஆட்சியில் பங்கு கேட்காது என்று அக்கட்சியின் எம்பி ரவிக்குமார் அறிவித்தார்.

இது விசிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது 2026 சட்டசபைத் தேர்தலில் எங்களின் கோரிக்கையாக இருக்காது. அதனை நாங்கள் இப்போது வலியுறுத்த மாட்டோம். ஆனால் அந்த கருத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த கோரிக்கையை தேர்தல் நிபந்தனையாக வைக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இது திமுகவுக்கு சாதகமான குரலாக மாறி இருக்கிறது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கூட்டங்களிலும் தொடர்ந்து ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும், கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பேசப்பட்டு கொண்டே இருந்தன. அப்படியில்லை என்றால், தவெகவுடன் கைகோர்க்கவும் தயங்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியினர் முனுமுனுத்தனர்.

இதற்கான முயற்சிகளும் தீவிரமாக எடுக்கப்பட்டது. இதனை கவனித்து வந்த திமுக தலைமை, அமைதி காத்தது. பீகார் தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் கட்சியினர் அமைதி காத்து வரும் நிலையில், விசிக திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஆட்சியில் பங்கு என்ற பேச்சை காங்கிரஸ் கட்சியினர் பேசாமல் இருக்க, திமுக சைலண்ட் செக் வைத்திருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிகளவில் எம்எல்ஏ-க்களை வைத்திருந்தாலும்,விசிக கொள்கை சார்ந்து திமுகவுடன் களத்தில் இருக்கிறது. அதேபோல் பாஜகவுக்கு எதிரான முக்கிய குரலாக திருமாவளவன் இருந்து வருகிறார்.

அதேபோல் கடந்த 7 ஆண்டுகளில் விசிகவின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்படியான சூழலில் அதிக எம்எல்ஏ-க்களை பெற வேண்டும் என்பதே திருமாவளவனின் நோக்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் முக்கிய கூட்டணி கட்சியான விசிகவின் குரலை வைத்தே காங்கிரஸ் கட்சியை திமுக சரிகட்ட பார்க்கும் என்றும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+