இஸ்லாமியர்கள் வாக்குகளை அள்ளும் திமுக.. தவெகவுக்கு 10% முதல் 15% தான்.. சொல்வது பத்திரிகையாளர் மணி!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு பின் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை திமுக முழுமையாக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் அமைதியாக இருப்பதாக கூறிய அவர், தவெகவுக்கு 10 முதல் 15 சதவிகித வாக்குகளே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது. இதன் காரணமாகவே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இதனால் தமிழக அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் திமுக கூட்டணி கட்சிகளும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் இதுவரை எந்தவித கருத்தையும் சொல்லவில்லை. இது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் மணி பேசுகையில், விஜய் இதுவரை வெளியிலேயே வரவில்லை.
அவர் என்ன அரசியல் கட்சித் தலைவர்.. வெளியில் வராத ஒரு தலைவரை வைத்துக் கொண்டு எப்படி தேர்தலை சந்திக்க முடியும்.. ஆதரவாளர்கள் இருந்தாலும், அதனை வாக்காக பூத்திற்கு கொண்டு வர வேண்டும்.. அதற்கு திமுகவுக்கு நிகரான கட்டமைப்பு அதிமுகவிடம் மட்டுமே உள்ளது. அரசியலில் பால பாடத்தை கூட தவெக மற்றும் விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு முன் சிறுபான்மை மக்களின் வாக்குகள் விஜய் பக்கம் செல்லாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு.. சிறுபான்மை மக்களின் இருப்புக்கு கேள்வி எழும் போது, அவர்கள் திமுக பக்கமே செல்வார்கள். சிறுபான்மை மக்களின் நோக்கம், யார் வரக்கூடாது என்பதுதான். சின்ன பசங்க மட்டும் தான் தவெகவுக்கு வாக்களிப்பார்கள்.
விஜய்யால் அதிகபட்சம் 10 முதல் 15 சதவிகிதம் வரை வாக்குகளை பெற முடியும்.. எல்லா தொகுதிகளிலும் 20 சதவிகித வாக்குகளை பெற்றாலும், வெல்ல முடியாது. ஒரு தொகுதியில் வெல்ல வேண்டுமென்றால் குறைந்தது 30 சதவிகித வாக்குகள் தேவை.. அதனால் 4 முனைப்போட்டியில் திமுக முன்னிலையில் உள்ளது. அடுத்த 4 மாதங்களில் திமுக எந்த சிக்கலிலும் சிக்காமல் இருந்தால் போதுமானது.
விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.. சிறுபான்மை மக்கள் அதனை பார்த்து கொண்டே இருப்பார்கள்.. பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக இருக்கும் போது, அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளாமல் விஜய் அமைதி காக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications