அதிர்ச்சி.. ஸ்டாலின் தொகுதியில் வாக்கு பதிவு ஏன் குறைந்தது தெரியுமா.. வெளியானது காரணம்..!
முக ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு குறைய என்ன காரணம்
சென்னை: மு.க.ஸ்டாலின் தொகுதியில் எதற்காக வாக்குப்பதிவு குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இது திமுக தரப்பை சற்று அதிர வைத்தும் வருகிறது.
நடந்து முடிந்த வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேற்றைய தனம் விவரங்களை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. இதில் ஸ்டார்களின் தொகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்தும் சத்யபிரதா தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன... அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் கூறினார். இதுதான் பெருத்த சலசலப்பையும், பரபரப்பையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.. காரணம், வழக்கமாக இந்த முறையும் சென்னையில் வாக்கு பதிவு குறைவுதான் என்றாலும், சதவீத அளவில் அதிகரித்துள்ளதுதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

தொகுதிகள்
தமிழகத்தில் மிகக்குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில், கடைசி 5 இடங்களில், அண்ணாநகர் 57.02 சதவீதம், மயிலாப்பூர் 56.59 சதவீதம், வேளச்சேரி 55.95 சதவீதம், தி.நகர் 55.92 சதவீதம். வில்லிவாக்கம் 55.52 சதவீதம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகள்தான் இப்படி என்றால் ஸ்டார் தொகுதியான கொளத்தூரிலும் இப்படியேதான் குறைவான வாக்கு சதவீதம் உள்ளது.

மேல்தட்டு மக்கள்
பொதுவாக, கிராமப்புறங்களில் நிறைவான வாக்குப்பதிவு நடக்கும்.. அந்த வகையில் எடப்பாடியார் தொகுதியில் வாக்குகள் கூடியிருக்கலாம் என்றாலும், படித்த, நன்கு விவரம் தெரிந்த நகர்ப்புற மேல்தட்டு மக்களுக்கு ஏன் இந்த ஜனநாயக கடமை தெரியாமல் போயிற்று என்ற அடிப்படை சந்தேகமும் நமக்கு எழுகிறது. ஓட்டுப்போடும் ஆர்வம் இவர்களுக்கு ஏன் குறைந்துவிட்டது, போதுமான விழிப்புணர்வு இவர்களுக்கு தேவையா என்ற துணை கேள்வியும் எழுகிறது.

கொளத்தூர்
இதில் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி மிகுந்த விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.. கொளத்துாரை பொறுத்தவரை தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பில், ஒரு பாகத்திற்கு, 50 பேர் வரை நிராகரிக்கப்படுவர். அதாவது, இதில் இறந்து போனவர்கள், வேறு தொகுதிக்கு இடம் மாறி சென்றவர்கள், போன்றோர் அடங்குவார்கள். ஆனால் இந்த முறை 150 முதல் 200 பேர் வரை, வாக்காளர் லிஸ்ட்டில் இருந்தே நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சர்ச்சை
குறிப்பாக, கொளத்தூரின் 20வது பாகத்தில், 208 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுதான் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.. இதில் கொடுமை என்னவென்றால், எப்படி ஓட்டு போடுவது என்றுகூட தெரியாமல் பலர் பூத்தில் இருந்து திரும்பி சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. இன்றைய சோஷியல் மீடியா உலகத்தில், ஓட்டுப்போட தெரியாமல் தங்களின் ஜனநாயக கடமையாற்ற முடியாமல் மக்கள் திரும்பி போகிறார்கள் என்றால், அது உண்மையிலேயே சற்று அதிர்ச்சிதான்..!

ஓட்டுப்பதிவு
அதேபோல, தேர்தல் அடையாள அட்டை கையில் இருந்தும், ஓட்டுப்போட அனைத்து முகாந்திரம் இருந்தும், பூத் சிலிப் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக பலரை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான், கொளத்துார் தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்ததாக காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இத்தனை காரணங்கள் சொல்லப்பட்டும், ஒருவேளை வாக்குப்பதிவில் திமுக அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு, மேலெழுந்து வெற்றி பெற்றால், அது உண்மையிலேயே சூப்பர்தான்..!
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications