சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"172 மொத்தம்"... அள்ள போகும் திமுக.. காங்கிரஸுக்கு பெரிய லாபம்.. நக்கீரன் சர்வே!

பல்வேறு தொகுதிகளில் அதிமுகவை திமுக முந்தும் என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுக்கு எப்படி வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து நக்கீரன் எடுத்த ரிசல்ட், தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்களை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியது. இந்த எக்ஸிட் போல்களை சதவிகித வாரியாகவும் அவை வெளியிட்டிருந்தன..

அவைகளின் ஒட்டுமொத்த பிந்தைய கணிப்புகளை வைத்து பார்க்கும்போது, கிட்டத்தட்ட 190 வரை திமுகவுக்கு சாதகமான சூழலே கிடைக்கிறது.. இதை பல்வேறு தகவல்களின் மற்றும் புள்ளிவிரங்களின் அடிப்படையில் அவை வெளியிட்டுள்ளன.

"கூவத்தூர்" கூத்தும்.. டீக்கடையும்.. ராஜதந்திரிகளா.. இவங்களுக்கு இதான் கடைசி தேர்தல்.. சம்பத் பொளேர்

நக்கீரன்

நக்கீரன்

அதுபோலவே நக்கீரனும் தேர்தலுக்கு முன்பு ஒரு சர்வே எடுத்துள்ளது.. கடந்த மார்ச் மாதமே நக்கீரன் ஒரு சர்வே எடுத்தது.. தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று அதில் கேட்டிருந்தது.. பெரும்பான்மையினர் திமுகவிற்கே வாக்களிப்போம் என்று கூறியிருந்தனர்.. இதுதொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளையும் நக்கீரன் வெளியிட்டிருந்தது.

திமுக

திமுக

அதில், "இந்த முறை இலவசங்களை மீறி 50 சதவீதம் பேர் திமுகவிற்கும், 38 சதவீதம் பேர் அதிமுகவிற்கும் வாக்களிக்க போவதாக தெரிவித்திருந்தனர். அதுபோலவே இந்த முறை எடுக்கப்பட்ட எக்ஸிட் போலில், திமுக மட்டும் 143 தொகுதிகளில் வெல்லக் கூடும் என்று கணித்துள்ளது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் தொகுதிகள் என்றும், திமுகவுக்கு இழுபறியான தொகுதிகள் என்றும் இரண்டாக பிரித்து தனித்தனி லிஸ்ட்டையும் வெளியிட்டுள்ளது.

தொகுதி

தொகுதி

இதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதை எடுத்து கொண்டால், அவையெல்லாம் ஏற்கனவே அரசியல் நோக்கர்களும், பல்வேறு கருத்து கணிப்புகளும் வெளியிட்ட தொகுதிகள்தான்.. இங்கெல்லாம் ஐபேக் டீம் இறங்கி வேலை பார்த்தது.. அதாவது திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளைவிட, திமுகவுக்கு எங்கு சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்துதான், ஐபேக் ஸ்கெட்ச் போட்டது.

சர்வே

சர்வே

அதனால்தான், அதிமுக வசம் இருந்த கொங்குவை இன்று திமுக தன் பக்கம் இழுக்க முடிந்தது.. ராமதாஸ் இருந்தும், வடமாவட்டங்களை வாரி சுருட்ட முடிந்தது. இது அத்தனையும் எக்ஸிட் போல் முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளன.. இதையேதான் நக்கீரனும் வெளிப்படுத்தி உள்ளது.. திமுக கூட்டணிக்கு மொத்தமாக 172 தொகுதிகள் கிடைக்கலாம் என்று நக்கீரன் சர்வே கணித்துள்ளது. ஆனால் இழுபறி தொகுதிகளின் எண்ணிக்கை 45 வரை இருக்கிறது. இதுதான் கடைசியில் திமுகவுக்கு 200 தொகுதிகள் வரை கிடைக்குமா என்பதை முடிவு செய்யும் என்று தெரிகிறது.

இழுபறி

இழுபறி

இழுபறி தொகுதிகள் பெரும்பாலும் அமைச்சர்கள் போட்டியிட்டுள்ள தொகுதிகளாகும்.. இவர்கள் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்தவர்கள், இப்போதும் இருப்பவர்கள்.. அதனால் கட்சி செல்வாக்கையும், சொந்த சமுதாய செல்வாக்கையும் பெற்றிருப்பதால், திமுகவுக்கு அங்கெல்லாம் இழுபறி ஏற்படும் நிலை உள்ளது..

சிட்லபாக்கம்

சிட்லபாக்கம்

உதாரணத்துக்கு ராயபுரத்தில் ஜெயக்குமார், பல்லாவரம் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி, போளூர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம் அர்ச்சுனன், குமாரபாளையம் தங்கமணி, உடுமலைப்பேட்டையில் உடுமலை ராதாகிருஷ்ணன், தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி, நன்னிலம் ஆர். காமராஜ், திருவிடைமருதூர் வீரமணி, விராலிமலை விஜயபாஸ்கர், புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், போடி ஓ.பி.எஸ், கோவில்பட்டி கடம்பூர் ராஜு, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா என அந்த லிஸ்ட் நீள்கிறது.

பாஜக

பாஜக

எனினும், இந்த தொகுதிகளில் ஆளும் தரப்பு மீதான அதிருப்தி, பாஜக மீதான கோபம், உட்பட வாக்களித்த மக்களின் மனநிலைமையை பொறுத்தே தேர்தல் முடிவுகளும் மாறக்கூடும் என்று தெரிகிறது.. அதேசமயம், வெற்றி வாய்ப்பு மற்றும் இழுபறி என நக்கீரன் கணித்து தந்துள்ள இந்த இரு லிஸ்ட்களும் திமுகவின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றே சொல்லலாம்!

தொகுதி

தொகுதி

இந்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸுக்கு பெரிய லாபம்தான்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சட்டசபைக்குள் தெம்பாக நுழையவுள்ளனர். மொத்தம் 8 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நக்கீரன் சொல்கிறது.

விசிக

விசிக

விசிகவுக்கும் நான்கு பேர் வரை கிடைப்பார்கள். ஆனால் ஆளூநர் ஷாநவாஸுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவர் வெல்ல வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரி வருவது குறிப்பிடத்தக்கது. பார்க்கலாம், இந்த கணிப்புகள் எந்த அளவுக்கு பலிக்கப் போகிறது என்பதை.

English summary
DMK Will Overtake ADMK in Many Constitutions, Nakkheeran Survey
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X