Delimitation: தொகுதி மறுவரையறையை கண்டித்து திமுக மகளிரணி கருப்பு கோலமிட்டு எதிர்ப்பு
ராணிப்பேட்டை: தொகுதி மறுவரையறை எதிர்ப்பை கண்டித்து ராணிப்பேட்டையை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் திமுக மகளிர் அணியினர் கருப்பு வண்ணங்களில் கோலங்களை வரைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை செய்ய சிறப்பு கூட்டமானது இன்று முதல் 18-ஆம் தேதி வரை நடக்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, தெலுங்கானா ஆகியவை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை கண்டித்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கான வரலாற்று அநீதி' என்று கூறி, ஏப்ரல் 16-ஆம் தேதியான இன்று இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் , வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல்குமார் இல்லத்தில் "தமிழ்நாடு தலைகுனியாது" "வெல்வோம் படைப்போம்" வரலாறு ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற வாசகங்களுடன் கோலங்களை கருப்பு நிறத்தில் வரைந்து கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தியபடி தங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வில் திமுக மகளிர் அணி சார்பில் வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயந்தி திருமூர்த்தி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சக்திகுமார் முன்னிலையில் மகளிர் அணி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications