Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிசா.. சிறைக்குள் ஸ்டாலின்.. நெஞ்சை மிதித்த போலீஸ்! திமுகவினரை கலங்க வைத்த பிறந்தநாள் அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில் மிசா வழக்கில் கைதாகி ஸ்டாலின் சிறை அனுபவித்த துயரங்களை காட்சிபடுத்தி உள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திமுகவினர் மாநிலம் முழுவதும் அவரது பிறந்தநாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பிறந்தநாள் பொதுக்கூட்டம்

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று மாலை ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிற மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தேசிய அரசியல் தலைவர்கள்

தேசிய அரசியல் தலைவர்கள்

அதன்படி இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் மாஜி முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்படுத்த ஸ்டாலின் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

முன்னதாக முக ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நேற்று புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் திறந்து வைத்தார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்த புகைப்பட கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரிய புகைப்படங்கள்

அரிய புகைப்படங்கள்

இந்த தொடக்க விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். சிறு வயதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இருந்தபோது எடுத்த புகைப்படம், அரசியலில் அவர் நுழைந்தபோது கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என பல அரிய புகைப்படங்கள் அதில் இடம்பெற்றன.

போற்றிய கமல்ஹாசன்

போற்றிய கமல்ஹாசன்

இந்த புகைப்படங்களை நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொன்றாக பார்வையிட்டார். இதனை அடுத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்களுக்கான பதிவேட்டில் "மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக, தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும் சவாலையும் அனுபவித்தவர். ஏற்றவர். அவரின் படிப்படியான உயர்வை படம் பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம். நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.

மிசா கைது

மிசா கைது

இந்த புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் எமர்ஜென்சில் காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமையை குறித்து விளக்கம் வகையில் ஒரு மாதிரி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஸ்டாலின் போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டு சிறையில் அதன் நெஞ்சில் காவலர் மிதித்துக்கொண்டு இருப்பதைபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காட்சிகள் தங்களை கலங்க வைப்பதாக திமுகவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+