"பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் திமுக வழக்கு தொடுக்காது.. தனிப்பட்ட விவகாரம்": டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
சென்னை : "ஆடியோ விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக வழக்கு தொடுக்காது எனத் தெரிவித்துள்ளார் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பேசுவதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தீயாகப் பரவியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை விட இந்த 2 ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சம்பாதித்து விட்டதாக பிடிஆர் பேசுவது போன்ற ஒரு ஆடியோவை அண்ணாமலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, பிடிஆர் பேசுவதாக இன்னொரு ஆடியோ வெளியானது. அதில், பாஜகவிடம் பிடித்த விஷயமே ஒரு நபர், ஒரு பதவி என்ற கொள்கை தான். கட்சியில் ஒருவர், ஆட்சியில் ஒருவர், ஆனால், திமுகவில் எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும் தான். தற்போது நான் பதவி விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும் என பிடிஆர் பேசுவதாக இருந்தது.
அடுத்தடுத்து 2 ஆடியோக்கள் வெளியான நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ பதிவுகள் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ க்ளிப் போலியாக ஜோடிக்கப்பட்டது என்றும், தான் இவ்வாறு யாரிடமும் நேரிலோ, தொலைபேசியிலோ பேசவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்த நிலையில், நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆடியோ விவகாரம் குறித்துப் பேசியுள்ள திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "ஆடியோ விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக வழக்கு தொடுக்காது.
ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிடிஆர் புகார் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications