"எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல்.." இளைஞரணி கூட்டம் முடிந்த கையோடு.. மு.க.ஸ்டாலின் போட்ட ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் முடிந்த கையோடு ஸ்டாலின் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். திராவிட மாடல் 2.0க்கான பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டதாக முதல்வர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் எல்லாக் கட்சிகளும் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகக் கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

DMK youth strength will give a blow to enemies says CM Stalin tweet after Tiruvannamalai meeting

ஸ்டாலின்

அதன்படி திமுக சார்பில் இன்று திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் நடைபெற்ற மைதானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் திறந்தவெளி மைதானத்தில் வருகை கொடுத்தார். அவருக்குத் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

வீடியோ

இதற்கிடையே இந்தக் கூட்டம் முடிந்த கையோடு ஸ்டாலின் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் திமுக கூட்டத்தில் திரண்டிருந்த இளைஞரணி தொண்டர்கள் குறித்த வீடியோவும் திறந்தவெளி வாகனத்தில் வந்த ஸ்டாலினை அவர்கள் வரவேற்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோவை பகிர்ந்த ஸ்டாலின், சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கிவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல்

இது தொடர்பாக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டரில், "Mass காட்டிய இளைஞரணி! திராவிட மாடல் 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியது! எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் கழகத்தின் இளம் கொள்கைப் பட்டாளமே புறப்படு! ஓய்வென்பதை மறந்து உழைத்திடு! 2026-இல் கழகத்தின் வெற்றிச் செய்தியை அளித்திடு!" என்று அவர் தெரிவித்தார்.

ஸ்டாலினின் இந்த ட்வீட்டை திமுகவினர் டிரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், ஒரு மாபெரும் மாநாட்டை எப்படிச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை மற்ற கட்சிகளுக்குக் காட்டும் வகையில் திமுக இந்தக் கூட்டத்தை நடத்திக் காட்டியிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு தேர்தல்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்தாண்டு 4 முனைப் போட்டி உருவாகும் சூழலே இருக்கிறது. ஒரு பக்கம் திமுக தனது கூட்டணியை வலுமையாக அமைத்துள்ளது. கடந்த பல தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் பெரியளவில் குழப்பம் இல்லை. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் அதே நிலை தான் நீடிக்கும் எனத் தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை பாஜக கூடன் கூட்டணியை அமைத்துள்ளனர். இதர கட்சிகளையும் கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகிறது.

அடுத்து நாம் தமிழர் கட்சி இந்த முறையும் கூட தனித்தே போட்டியிடுகிறது. அக்கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. அடுத்து தவெகவும் இந்த முறை தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளது. விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சிகள் உடனேயே கூட்டணி என தவெக சொல்லியுள்ளது. கடைசி நேரத்தில் தவெக கூட்டணியிலும் சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+