"ஸ்பாட்டுக்கு" வந்த உதயநிதி.. கூடவே தயாநிதி.. இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.. திணறும் தமிழகம்
இந்தி திணிப்பை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது
சென்னை: இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து வருகிறார்..
மொழி பிரச்சனை தற்போது தலைதூக்கி வருகிறது.. மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியதோடு இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

உதயநிதி
இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும்.

உள்ளிருப்பு
உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். நாளை (இன்று) தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை கிடையாது.. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது.. கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது எனக் கூறி உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தினார்கள். பல்கலைக் கழக துணைவேந்தர்களிடமும் அதை பற்றி சொல்லி இருந்தார்கள். முதலமைச்சரிடம் அதை பற்றி சொன்னோம்.

ஹிந்தி திணிப்பு
அவர் உடனடியாக 53 கோடியே 20 லட்சம் அதற்காக ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். எனவே அந்த ஆசிரியர்களை நான் கேட்டுக் கொள்வது நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் உங்கள் ஊதியம் அளிக்கப்படும். நேற்று முன் தினம் இங்கு வந்த மத்திய இணை அமைச்சர் கூட இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிற மாணவர்களுக்குக் கூட அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார். எனவே நுழைவுத்தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்துதான் இளைஞரணி மாணவரணி இணைந்து போராட்டம் நடத்த உள்ளது..

100 ஏக்கர்
ஆகவே, மீண்டும் வரலாறு திரும்பும் சூழ்நிலை உருவாகாமல் இருக்க வேண்டும். இதற்குமுன் நடந்த மொழிப்போரிலே பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி இன்றும் தொடர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துதான் போராட்டமே நடக்க உள்ளது.. மேலும், 100 ஏக்கர் நிலமும் 50 கோடி ரூபாய் பணமும் பல்கலைக்கழகத்தின் பேரில் இருந்தால் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகம் துவங்க அனுமதி அளிக்கப்படும்' என்று கூறியிருந்தார்.

உதயநிதி MLA
அந்தவகையில், இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது.. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி வருகிறார்.. அவருடன் எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications