விக்கிரவாண்டி: திமுக 67,757 வாக்கு வித்தியாசத்தில் மெகா வெற்றி.. தலைவர்கள் பிரசாரம் செய்யாமலே சாதனை
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,000-க்கும் அதிகமான வாக்குகளுடன் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொகுதியில் பிரசாரம் செய்யவில்லை. வீடியோ மூலம் மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இத்தேர்தலை புறக்கணித்ததாலும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நிலைப்பாடு எடுத்ததாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் களம் கண்டனர். இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுகவின் அன்னியூர் சிவா அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி 2011-ல் தான் உருவானது. ஆனால் இதுவரை 2019, 2021 என இரு இடைத் தேர்தல்களை எதிர்கொண்டது. 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் நா. புகழேந்தி லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும்; தலைவர்கள் பிரசாரம் களைகட்டும். ஆனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அப்படி எதுவும் பரபரப்பானதாகவும் இருக்கவில்லை. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பிரசாரம் செய்யவில்லை. ஆனால் வீடியோ பதிவு மூலம் வாக்கு சேகரித்தார்.
அண்ணா திமுகவைப் பொறுத்தவரையில் இடைத் தேர்தலை புறக்கணித்தது. மேலும் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு எனவும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் விக்கிரவாண்டி பக்கம் வரவில்லை. பிரதான கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யாத நிலையில் நடைபெற்றதுதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.
இத்தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தபால் வாக்குகள் முதல் 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கை வரை தொடர்ந்தும் திமுகவின் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications