உதயநிதி இல்லையா.. திமுக முதல்வர் வேட்பாளர் சூர்யாவா? ஒரே குழப்பமா இருக்கே.. காயத்ரி ரகுராம் நறுக்
காயத்ரி ரகுராம் நடிகர் சூர்யாவை விமர்சித்துள்ளார்
சென்னை: "திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா?" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
சூர்யாவின் ஜெய்பீம் பட சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்... இதற்கு சூர்யாவும் விளக்கம் தந்து பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

புகார்
ஆனாலும் இன்னும் விவகாரம் சுற்றி கொண்டே இருக்கிறது.. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... இந்நிலையில்தான் "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ராஜாக்கண்ணு
இதனிடையே, போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.. அதேபோல,
கடந்த 4-ம்தேதி, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருந்தார்.. மேலும், பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் திமுக அரசு தற்போது எடுத்து வருகிறது..

நம்பிக்கை
அரசின் இந்த செயல்பாட்டுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருந்தார். அத்துடன், "எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது" என்றும் கூறியிருந்தார்.

காயத்ரி ரகுராம்
இப்படி திமுக அரசும், நடிகர் சூர்யாவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மாறி மாறி உதவிகளை செய்து, நன்றிகளையும் தெரிவித்து வரும் நிலையில், பாஜக தன்னுடைய அதிருப்தியையும், கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக பாஜகவின் கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சூர்யாவை விமர்சித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

நிஜவாழ்க்கை
அதில், "உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி... திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். why tension? Cool.." என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்
காயத்ரின் இந்த பதிவிற்கு பலரும் திரண்டு வந்து தங்கள்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. "அந்த அம்மாவுக்கு அவர் 10லட்சம் கொடுத்தாரே.. நீங்கள் என்ன தந்தீர்கள்? ஒன்னு நீ நல்லது செய்யனும், இல்லைனா நல்லது செய்றவங்கள தொந்தரவு செய்யக் கூடாது.. புரிஞ்சுதா" என்று கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பாஜகவினரும், "தானாக கொடுக்கவில்லை.. கொடுக்க வைத்தோம்" என்று பதிலளித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications