Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை ரிசல்ட்.. "உலை" வைக்குதா பாஜக? யாருமே எதிர்பார்க்காத பூஸ்ட்! மலைத்த திராவிட கட்சிகள்! என்னாகுமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் ரிசல்ட் நாளை வெளியாக உள்ள நிலையில், எக்ஸிட் போல் முடிவுகளே பாஜகவுக்குள் மாற்றத்தை தந்துள்ளதாம்..!!

நடந்து முடிந்துள்ள லோக் சபா தேர்தலில், தமிழகத்தில் திமுகவே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு வந்தது.. அதுபோலவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் திமுகவே வெற்றி பெறும் என்று கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

BJP lok sabha election 2024 Tamil nadu BJP Annamalai

மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளன.. அப்படியானால், இதில் 3வது இடத்தையே இந்தியா கூட்டணி பெறும் என்றும் கூறப்படுகிறது.

பரபரப்பு: இந்த முறை தமிழக பாஜகவை பொறுத்தவரையில், கூட்டணி விஷயத்திலிருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது.. வழக்கமாக திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே கூட்டணி வைக்கும் பாஜக, இந்த முறையும் அதுபோன்றதொரு முயற்சியையே கையில் எடுக்கும் என்றார்கள் அரசியல் நிபுணர்கள். இதற்கான முயற்சியில் பாஜக ஓரளவு இறங்கியது என்றாலும், அதற்காக யாரிடமும் காத்திருக்கவில்லை.

தனித்து போட்டி என்ற அதிரடி முடிவை அறிவித்தது.. தன்னை முழுமையாக நம்பி வந்த கட்சிகளை கூட்டணியில் இணைத்து தேர்தலையும் சந்தித்தது. இதில் முக்கிய கட்சியாக கருதப்படுவது பாமகதான்.

கூட்டணி: வழக்கமாக எந்த தேர்தல் என்றாலும், திராவிட கட்சிகள் பாமகவுடன் முந்திக்கொண்டு கூட்டணி வைக்கும்.. ஆனால், இந்த முறை அனைத்து கட்சிகளையும்விட, பாமகதான் கடைசியாக கூட்டணிக்குள் நுழைந்துள்ளது.

கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, இந்த முறை எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக இன்னமும் நிலவிவருகிறது.

வட தமிழகம்: வட தமிழகத்தின் வாக்கு வங்கிக்காக பாமவையே, பாஜக பெரிதும் நம்பியிருப்பதாக தெரிகிறது. பாமகவின் வாக்கு சதவீதத்தினால், கூட்டணிக்கு பலம் என்பதுடன், திமுக, அதிமுகவின் ஓட்டுக்களை சிதறடிக்க முடியும் என்றும் பாஜக நம்புகிறதாம்.

இந்த நம்பிக்கை வீண் போகாது என்றே தெரிகிறது.. காரணம், தமிழகத்தில் பாஜக கட்சியால், ஒருபோதும் கால் ஊன்ற முடியாது என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், இப்போது அந்த கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளதை பார்த்து பாஜகவினரே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

என்ன காரணம்: இதற்கெல்லாம் காரணம், அண்ணாமலையின் உழைப்பு, பிரதமர் மோடியின் தீவிரமான பிரச்சாரம் இவை இரண்டும்தான், தாமரை கட்சியை அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக அக்கட்சியினர் பூரித்து சொல்கிறார்கள்.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 1 முதல் 3 இடங்களும், சிஎன்என்நியூஸ் 18 கருத்து கணிப்பில் 2 இடங்களிலும், டி.வி.9 கருத்துக் கணிப்பில் 4 இடங்களும், தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் 5 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

பூஸ்ட் பாஜக: இவையெல்லாம் வெறும் கணிப்புகள் என்றே வைத்து கொண்டாலும், இதுவும் பாஜக தொண்டர்களுக்கு பூஸ்ட் போல அமைந்து வருகிறதாம். நாளைய தினம் ரிசல்ட் எப்படி இருந்தாலும், தற்போது வெளியாயிருக்கும் எக்ஸிட் போல்கள், பாஜகவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போக உதவும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+