Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதியிடம் ரூ.1.10 கோடி நஷ்டஈடு.. வழக்கை நிராகரிக்ககூடாது என எடப்பாடி ஹைகோர்ட்டில் பதில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Do not dismiss the defamation case against Udhyanidhi Stalin Edappadi Palaniswami filed a counter petition in chennai High Court


அதாவது சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு தன்னை பற்றி தவறான கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். இதன்மூலம் அவதூறு பரப்பி தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க நினைக்கிறார் எனக்கூறியதோடு, உதயநிதிக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிராகரிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆளுநர் மாளிகைக்கு ஓடிய எடப்பாடி.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பதவி விலக வேண்டும் என ஆவேசம்


அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும், எனவே அவர் பேசியது அவதூறு கருத்தா இல்லையா என்பது விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்பதால் உதயநிதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை நிராகாரிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+