டேங்கர் லாரியிலிருந்து விழுந்து இறந்த அஜித் ரசிகர்.. டிஜிபி சைலேந்திர பாபு அவசர அட்வைஸ்
சென்னை: நடிகர் அஜிக் குமாரின் நடிப்பில் வெளியான துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் பரத்குமார் ஆர்வமிகுதியில் டேங்கர் லாரி மீது ஆட்டம் போட்டதில் கிழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விடுத்த வேண்டுகோளில், சினிமா படங்கள் வெளியாகும்போது பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் துணிவு, வாரிசு திரைப்படம் நேற்று நள்ளிரவு வெளியானது. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களான இரு பெரும் நட்சத்திரங்களின் படம் வெளியாவதை இருவரின் ரசிகர்களும் தடபுடலாக தியேட்டர் முன்பு கொண்டாடினர்.
இதில், அஜித்தின் துணிவு படத்தை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் நள்ளிரவு நேரத்திலும் திரையரங்கம் முன்பு திரண்டனர். குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கத்திலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ரசிகர்களுடன் ஆட்டம் பாட்டம்
அப்போது, சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் பரத்குமார் (வயது 19) துணிவு படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு வந்து இருந்தார். படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலையாக ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திலும் வேலை செய்து வரும் பரத் குமார் துணிவு படத்தை பார்க்க இருக்கும் உற்சாகத்தில் சக ரசிகர்களுடன் ஆட்டம் பாட்டம் என உற்சாகத்தில் இருந்தார்.

லாரியில் இருந்து விழுந்து ரசிகர் சாவு
அப்போது உற்சாக மிகுதியால் பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். அப்போது பரத்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடம் உடைந்துபோனது. இதனால் வலியால் அலறி துடித்த பரத் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். படம் பார்க்க சென்ற இடத்தில் அஜித் ரசிகர் லாரியில் இருந்து விழுந்து அடிபட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டிஜிபி சைலேந்திர பாபு வேண்டுகோள்
இந்த சம்பவம், படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விடுத்த வேண்டுகோளில், சினிமா படங்கள் வெளியாகும்போது பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். செங்கல் பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதெல்லாம் ஆபத்தான செயல்
பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது. மோட்டோர் சைக்கிளாக இருந்தாலும் சரி இதுபோல வாகனத்தின் மீது ஏறுவது, இதுவெல்லாம் மிகவும் ஆபத்தானது. அதேபோல கட் அவுட்கள் மீது ஏறுவது இதெல்லாம் ஆபத்தான செயல். இளைஞர்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்து வரக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடாது என காவல்துறையில் இருந்து அறிவுரை கொடுக்கிறோம். படித்து வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கும் இளைஞர், இதுபோல தேவையின்றி டேங்கர் லாரியில் ஏறி கீழே விழுந்து இறப்பது, இல்லாவிடில் கட் அவுட்டில் மேலே ஏறி இறந்துபோகும் போது அந்த குடும்பமே சிரமத்திற்கு உள்ளாகிறது.

கட்டுப்பாட்டை மீறிதான் நடகிறது
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். காவல்துறை இதுபோன்ற செயல்களை தடுத்துதான் வருகிறது. அதையும் மீறி செய்கிறார்கள். 5 காவலர்கள் இருக்கும் போது 5 ஆயிரம் பேர் வந்துவிட்டால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்கள் கண்ணுக்கே தெரிவது இல்லை. காவல் துறை கட்டுப்பாட்டை மீறிதான் இதுபோல செயல்கள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications