விளம்பரம் பேனர் வைக்காதீர்! இனிமேலாவது கேளுங்க! திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்!
சென்னை: தன்னை வரவேற்று ப்ளக்ஸ் பேனர்களோ, விளம்பர பதாகைகளோ, வைக்க வேண்டாம் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் தாம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கட்சியினர் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கட் அண்ட் ரைட்டாக கூறியிருக்கிறார்.

நானும் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன், நீங்களும் கேட்காமல் பேனர் வைத்து வருகிறீர்கள் என நொந்துகொண்ட உதயநிதி, இனிமேலாவது பேனர்களை தவிருங்கள் என அறிவுறுத்தினார்.
தாம்பரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கபடி போட்டியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பிரம்மாண்ட கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடங்கி வைப்பதற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் வான வேடிக்கையாக வண்ண வண்ண மத்தாப்புகளும் வெடிக்கப்பட்டன.
இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான உதயநிதி ஸ்டாலின், மைக் பிடித்தவுடன் முதல் வேளையாக தன்னை வரவேற்று ப்ளக்ஸ் பேனர்களோ, விளம்பர பதாகைகளோ, வைக்க வேண்டாம் என்றும் வெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

வீட்டிலிருந்து தாம்பரம் புறப்பட்ட போது மழை பெய்து கொண்டிருந்ததாகவும் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே தாம் வந்ததாகவும் நல் வாய்ப்பாக மழை விட்டதால் கபடி போட்டி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இங்கிருக்கும் கூட்டத்தினர் நிச்சயம் தனது பேச்சை கேட்க வந்திருக்கமாட்டார்கள் என்றும் கபடி போட்டியை பார்க்கவே வந்திருப்பார்கள் எனவும் யதார்த்தமாக பேசினார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications