இந்த வங்கியின் டெபிட் கார்டு வைத்திருக்கிறீர்களா.. அப்போ அக்.31 க்கு மேல் செல்லாது! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் "இந்த" வங்கியின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கிறீர்களா, அதனுடன் செல்போன் எண்ணை பதிவு செய்யாவிட்டால் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகு அந்த கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் பாஸ்புக்கை எடுத்துக் கொண்டு சல்லானை பூர்த்தி செய்து வரிசையில் நின்று பணத்தை எடுத்தது எல்லாம் அந்த காலம். இன்று ஏடிஎம் கார்டுகள் வந்துவிட்டன. இவற்றை அதற்குரிய மெஷினில் செருகி பாஸ்வேர்டு போட்டால் போதும் நாம் கேட்கும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

Do you hav BOI ATM card then it wont be valid after October 31?

அதற்கு முதலில் நம் கணக்கில் இருப்பு இருக்க வேண்டும் , அது முக்கியம். இன்று நிறைய வங்கிகள் புற்றீசல் போல் பரவி விட்டன. விசிட்டிங் கார்டு போல் கலர் கலராக ஏடிஎம் கார்டுகள் பர்ஸுகளை அலங்கரிக்கின்றன (அவற்றில் பேலன்ஸ் இருக்காது, அது வேறு விஷயம்).

இது போன்ற ஏடிஎம் கார்டுகள் இன்று எத்தனை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒருவரை மருத்துவமனையில் நடுராத்திரியில் சேர்க்கிறோம். அங்கு முன்பணம் கட்ட சொன்னால் அந்த நேரத்தில் வங்கி திறந்திருக்காது. ஆனால் ஏடிஎம் கார்டை வைத்து பணத்தை செலுத்தி விடலாம்.

இப்படி பல நன்மைகளை தரும் ஏடிஎம் கார்டுகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த வங்கிகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் பேங்க் ஆப் இந்தியா என்ற ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கும் ஏடிஎம் கார்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவரை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31 க்கு பிறகு ஏடிஎம் கார்டில் இருந்து எந்த பரிவர்த்தனையும் செய்யவோ அல்லது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கவோ முடியாது. இந்த சிக்கல்களை தவிர்க்கவே பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்களை அளித்துள்ளது. இவற்றை ட்விட்டர் மூலம் அளித்து வருகிறது.

அந்த ட்வீட்டில், அன்புள்ள வாடிக்கையாளர்களே ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி டெபிட் கார்டு சேவைகளை பெற மொபைல் எண் கட்டாயம். எனவே வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செல்போன் எண்ணை பதிவு செய்யுங்கள். பழைய எண்ணை மாற்றியிருந்தால் புதிய எண்ணை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

அந்த மொபைல் எண்ணை இணைப்பதற்கு ஆன்லைன் மூலமாகவோ ஏடிஎம் மையம் மூலமாகவோ செய்யலாம். ஒரு வேளை அப்படி செய்ய முடியாவிட்டால் வங்கிக் கிளையை அணுகி அங்கு செல்போன் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். உங்கள் மொபைல் போன் எண்ணை இணைக்க வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலும் ஆதார் கார்டு நகலும் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஏடிஎம் கார்டை பயன்படுத்த செல்போன் எண் கட்டாயம். எனவே அந்த எண்ணை எப்போது புதுப்பித்திருக்க வேண்டும். ஏடிஎம் மூலம் செய்யப்படும் பணபரிமாற்றங்கள் எல்லாம் நீங்கள் கொடுக்கும் செல்போன் எண்ணுக்கு தகவலாக செல்லும் என அந்த ட்வீட்டில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்படி செய்யாவிட்டால் மோசடிகள் நடக்க நாமே வழிவகை செய்தது போல் ஆகிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+