கிரெடிட் கார்ட் வச்சிருக்கீங்களா.. இந்த தப்பை மட்டும் எந்த காரணம் கொண்டும் செஞ்சுடாதீங்க..!
சென்னை: கிரெடிட் கார்டை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் அது பயன் தரும். ஆனால் கிரெடிட் கார்டை சில இடங்களில் தேவை இல்லாமல் பயன்படுத்தவே கூடாது. அதேபோல் கிரெடிட் கார்டில் சில சிக்கல்களும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.
கிரிடிட் கார்டு இன்றைக்கு பலரும் பயன்படுத்தும் கருவியாகிவிட்டது. அவசரத்திற்கு முன்பு பக்கத்து வீடுகளில் கைமாற்றாக பணத்தை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது அந்த வேலையை வங்கிகள் கிரெடிட் கார்டு மூலம் செய்கின்றன. ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் பக்கத்து வீட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை கொடுக்க முடியாவிட்டால் தள்ளி போட கேட்கலாம். ஆனால் வங்கிகள் அப்படி அல்ல, வட்டி விதிக்கின்றன.

கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி கொண்டு வட்டி இல்லாமல் 45 நாட்கள் கழித்து கட்ட முடியும். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் நீங்கள் பணத்தை கட்டாமல் விட்டால், வட்டி அதிகமாக விதிப்பார்கள். பிராஸசிங் பீஸ், வட்டி , அபராதம் என தொகை என அதிகமாக இருக்கும்.
கிரெடிட் கார்டு என்பது கடன் வலையில் மக்களை சிக்க வைக்கும் அபாயம் இருப்பதால், தயவு செய்து யாருக்கெல்லாம் கடன் சுமை அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டு வைக்க வேண்டாம்.
இயல்பாகவே அதிகமாக பொருள்களை வாங்கும் எண்ணம் உள்ளவர்கள், கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ள முடியாதவர்கள், நிதியை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டை வாங்கவே கூடாது.
கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் செலுத்தாமல் விட்டால் அது சிபில் ஸ்கோரை பாதிக்கும். மேலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என்பதால் , எந்த சூழலிலும் நிலுவை தொகை வைக்காதீர்கள்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரே சமயத்தில் 2 முதல் 3 கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளவே கூடாது. சலுகைகள் தருவதாகக் கூறி வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளை முழுமையாக புரியாமல் வாங்காதீர்கள். அதேபோல் குறைந்தபட்ச தவணைத் தொகையைக் கட்டிவிட்டு மீதியை தவணையில் கட்டாதீர்கள்.
ஏனெனில் மீது தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி போடுவார்கள். எனவே கிரெடிட் கார்டில் கடன் வாங்கிடாதீர்கள். உங்களால்திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிந்தால் தயவு செய்து கிரெடிட் கார்டில் பொருளை வாங்கிவிடாதீர்கள்.
கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுப்பதை கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications