பிஎப் கணக்கு வச்சிருக்கீங்களா.. சென்னைவாசிகளே இன்று நடக்கும் சிறப்பு முகாமை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்று பல்வேறு சந்தேகங்களுக்கு நிவாரணம் பெறலாம் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உங்களுக்கு மாதம் மாதம் பிடிக்கப்படுகிறதா? உங்களுக்கு பிஎப் கணக்கு குறித்து நிறைய சந்தேகங்கள் இருக்கிறதா? நீங்கள் பிஎப் பென்சன் வாங்குகிறீர்களா? அதில் ஏதேனும் குறைகள் அல்லது சிக்கல்கள் இருக்கிறதா? ஆன்லைனில் தீர்வு கிடைக்காமல் உள்ளீர்கள் என்றால், இன்று நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

சென்னை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் 'வைப்புநிதி உங்கள் அருகில்' (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற பெயரில் இன்று (ஏப்.29) குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறை விளக்கம், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் உடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல், 'இ-நாமினேஷன்' தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இதில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாவட்டத்தில், 'பொன் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, சப்தகிரி நகர், ஆற்காடு சாலை, ஏஆர்எஸ் கார்டன் எதிரில், சென்னை-600 087' என்ற முகவரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 'சாய் மிர்ரா இன்னோஃபார்ம் பிரைவேட்லிமிடெட், கோத்ரெஜ் சாலை, பட்டரைவாக்கம், சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர் சென்னை-600 053' என்ற முகவரியிலும் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 'பேராசிரியர் தனபாலன் அறிவியல், மேலாண்மை கல்லூரி, ராஜீவ்காந்தி சாலை, சென்னை-603 103' என்ற முகவரியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'ஆட்டோனியம் நிட்டோகு சவுண்ட் புரூஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆர்என்எஸ்-15, சிப்காட் தொழில்துறை வளர்ச்சி மையம், ஒரகடம், வடக்குப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்-603 103' என்ற முகவரியிலும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை அறிய https://www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications