மோடியின் ஜன் தன் கணக்கு வெச்சிருக்கீங்களா? பாங்க் ஆஃப் பரோடா உடனே தரும் ரூ.5000 கடன்! பெண்கள் ஹேப்பி
சென்னை: இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.. தங்களுக்குள் சிறு சிறு தொகைகளைச் சேமித்து வைத்துக்கொண்டு.. அவசர காலங்களில் ஒருவருக்கொருவர் கடன் கொடுத்து உதவி கொள்வதுதான் இவர்களின் வழக்கம்.. ஆனால் பல நேரங்களில் வங்கியில் முறையாக ஒரு சிறு கடனைப் பெற வேண்டும் என்றால் கூட.. ஏகப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். இதனால் அவசரத் தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்காமல் சிக்கல் ஏற்படும். அதற்குதான் பாங்க் ஆஃப் பரோடா ஒரு சூப்பரான திட்டத்தை கொண்டு வந்துள்ளது..
பாங்க் ஆஃப் பரோடா வங்கி இப்போது யுபிஐ (UPI) மூலமாகவே ஓவர் டிராஃப்ட் என்ற கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.. இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு ரூ. 5,000 வரை உடனடி கடன் வரம்பு வழங்கப்படுகிறது.
இதற்காக பெண்கள் வங்கிக்கு நேரில் சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை.. உங்களின் மொபைல் போனில் உள்ள ஜிபே அல்லது போன்பே போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவே உங்களுக்குத் தேவைப்படும் போது இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

கிராமப்புறங்களில் தையல் கடை
இந்த புதிய கடன் வதி திட்டம் யாருக்கெல்லாம் உதவும் என்று பார்த்தால்.. கிராமப்புறங்களில் தையல் கடை வைத்திருப்பவர்கள், சிறு உணவகம் நடத்துபவர்கள் அல்லது கைவினைப் பொருட்கள் செய்யும் பெண்களுக்கு இது ஒரு பெரிய மூலதனமாக அமையும்.
திடீர்னு பிசினசில் தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றாலோ அல்லது வீட்டில் திடீர் மருத்துவச் செலவு போன்ற அவசர தேவைகள் வந்தாலோ.. யாரிடமும் கையேந்தாமல் உங்கள் போன் மூலமாகவே இந்த 5,000 ரூபாயைப் பெற்றுக் கொள்ள முடியும்.. குறிப்பாக பிரதம மந்திரி ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு இந்த வசதி மிக எளிதாகக் கிடைக்கும்..
பாங்க் ஆஃப் பரோடா
தற்போது இந்த சேவை முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது.. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு கொண்டு வரப்பட்டுள்ள இந்த முறையில்.. வங்கி ஏற்கனவே உங்களின் யுபிஐ கணக்குடன் ஒரு குறிப்பிட்ட கடன் தொகையை இணைத்து வைத்திருக்கும்.
உங்களுக்குப் பணம் தேவைப்படும் போது மட்டும் அந்தத் தொகையைப் பயன்படுத்திவிட்டு.. பின்னர் உங்களின் வசதிக்கு ஏற்ப அதே யுபிஐ மூலமாகத் திருப்பிச் செலுத்திவிடலாம்.. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முறையான கணக்கு உங்கள் போனிலேயே இருப்பதால்.. பணத்தை எதற்கெல்லாம் செலவு செய்தோம் என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்..
ரூ.5000 கடன் வசதி
இனிமேல் வங்கிக் கிளைகளுக்கு அலைந்து திரிந்து கடன் வாங்க வேண்டிய காலம் மெல்ல மறைந்து வருகிறது.. கிராமப்புறப் பெண்களின் கைகளில் உள்ள செல்போனியே இப்போது அவர்களின் வங்கி கிளையாக மாறியுள்ளது தான் தற்போதைய ஹைலைட்டான விஷயமாகும்.
பாங்க் ஆஃப் பரோடாவின் இந்த முயற்சி பெண்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு.. அவர்களின் சிறு தொழில்கள் தடையின்றி வளரவும் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.. இந்த வசதி கிராமப்புற பெண்களுக்கு மிகுந்த தைரியத்தையும் பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது..!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications