வங்கி கணக்கு இருக்குல்ல? பேங்க் பணமா? ATM பணமா? ஒரே செகண்டில் சிக்க போறாங்க.. தமிழ்நாட்டில் சபாஷ்
சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள போகிறதாம்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, தேர்தலில் முறைகேடாக பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

புதிய செயலி: வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், முறைகேடாகவும் பணம் கொண்டு செல்லப்பட்டால், அதை கண்டுபிடிக்க புதிய செயலி பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியிருந்தார்.
அதாவது, அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும்,வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின்போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றை பொதுமக்களே நேரடியாக சி-விஜில் என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம் என்றும், அதில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்திருந்தார்.
ஸ்கேனிங் முறை: இந்நிலையில், வாகன தணிக்கையின்போது, வங்கி பணத்தை உறுதி செய்ய ஏதுவாக, லோக்சபா தேர்தலில், க்யூ.ஆர் கோடு ஸ்கேனிங் முறையை தேர்தல் கமிஷன் செயல்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்களை கண்டறிந்து தடுப்பதற்காக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.. உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு அமலுக்கு வரப்போகிறது.
கருவூலம்: அதேபோல, ATM மையங்களில் வைப்பதற்காகவும், கருவூலங்களிலிருந்து வங்கிக்கும், வங்கியிலிருந்து கருவூலத்துக்கும், பணம் அனுப்பப்படுவது வழக்கம்.. ஆனால், தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துவிட்டால், வங்கி பணம் எடுத்துச்செல்லும் வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்....
எனவேதான், க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் மூலம், வங்கி பண விவரங்களை மிக சுலபமாக உறுதி செய்யும் வழிமுறையை தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்த போகிறதாம்.. வங்கி சார்பில் பணம் அனுப்பப்படும்போது, முழு விவரங்களை உள்ளடக்கிய க்யூ.ஆர்., கோடுடன் கூடிய, ரசீது, வாகனங்களில் கொடுத்தனுப்பப்படும்...
எளிய வசதி: தேர்தல் பறக்கும்படையினரும், நிலை கண்காணிப்பு குழுவினரும், தங்கள் செல்போனில் ESMS ஆப் மூலம், இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து கொள்ளலாம்..
அப்படி ஸ்கேன் செய்தால், இந்த பணம், நிஜமாகவே வங்கி பணம்தானா? எந்த வங்கியிலிருந்து, எந்த இடத்திலுள்ள கருவூலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது? எந்த வங்கியிலிருந்து ATM மையத்துக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது? வங்கி பணத்தை எடுத்துச்செல்லும் வாகனம் என்ன? அந்த வண்டியின் டிரைவர் யார்? இப்படி அனைத்து விவரங்களையும் க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் மூலம், ஒரே செகண்டில் தணிக்கை அதிகாரிகளால் கண்டுபிடித்துவிட முடியும்.
சபாஷ் முயற்சி: இதனால், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக மோசடியாக பணம் எடுத்துச்செல்வது தடுக்கப்படும்.. அத்துடன், வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் எளிதாக பணத்தை கொண்டு செல்லவும் முடியும் என்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications