உங்க கிட்ட 2 பான் கார்டு இருக்கா.. ரூ.10,000 ரெடியா வெச்சுக்கீங்க.. ஏன் தெரியுமா.. உடனே இதை படிங்க
சென்னை: ஒருவரே 2 பான் பார்டுகளை வைத்திருக்கிறீர்களா? 2-க்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்துகிறீர்களா? அப்ப உங்களுக்குதான் இந்த செய்தி.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
அபராதம்: நடைமுறை வாழ்க்கைக்கு இந்த பான்கார்டு மிகவும் அவசியம்.. ஆனால், ஒரே ஒரு பான்கார்டுதான் நாம் வைத்திருக்க வேண்டும்.. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்க நமக்கு அனுமதி கிடையாது.. ஒருவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பிடிபட்டால், வருமான வரித்துறை உங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்துவிடும்.. அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதித்துவிடும்.

ஒருவரே 2 பான் கார்டுகளை வைத்திருக்க சில காரணங்கள் இருக்கலாம். ஒருவர், பான் கார்டு அப்ளை செய்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம். ஆனால், அது சரியான நேரத்துக்கு வராமல் போய்விடும்.. எனவே, சம்பந்தப்பட்டவர் இன்னொரு பான் கார்டு அப்ளை செய்யக்கூடும்.. அப்போது, ஏற்கனவே விண்ணப்பித்ததுடன் சேர்த்து 2 பான் கார்டுகள் வந்துவிடும்.
2 கார்டுகள்: சிலர், திருமணத்திற்குப் பிறகு, குறிப்பாக, பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் பிறகு அது அவர்களின் பான் எண்ணிலும் மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றாமல் புதிய பான் எண்ணுக்கு விண்ணப்பித்தால் அந்த பெண்ணுக்கு 2 பான் கார்டுகள் இருப்பதாகிவிடும்.. இப்படி தெரியாமல் 2 கார்டுகளை சிலர் வைத்திருக்க நேரிடுகிறது.. மேலும் சிலர் மோசடிக்காக பல பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்.
இந்த பான் எண்ணை எப்படி ஒப்படைப்பது தெரியுமா? ஆன்லைன் + ஆஃப்லைன், இந்த இரண்டிலுமே பான் கார்டை சரண்டர் செய்ய விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் சரண்டர் செய்யும் முறை: PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதன்மேல், நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை பதிவிட வேண்டும்.. ITEM NO: 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை தர வேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL வெப்செட்டிற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஃப்லைனில் சரண்டர் செய்யும் முறை: இதற்கு படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய பான் கார்டின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.. இந்த படிவத்தை உங்கள் அருகிலுள்ள UTI அல்லது NSDL TIN வசதி மையத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.. பிறகு அதற்கான ஒப்புகை ரசீதை வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் அதிகார வரம்பில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்..
அதில், வருமான வரித் துறையின் வெப்சைட்டில், உங்கள் பகுதியின் அதிகார வரம்பு அதிகாரி யார்? என்பதை அறியலாம்.. இந்த கடிதத்தில், உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதுடன், சரணடைய வேண்டிய நகல் பான் கார்டின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் NSDL TIN இலிருந்து பெறப்பட்ட ஒப்புகை ரசீதையும் சான்றளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications