எஸ்.பி.ஐ வங்கி போறீங்களா? SBI ஏடிஎம்மில் பணம் இல்லையா? குழம்பிய கஸ்டர்ஸ்.. எஸ்பிஐ திடீர் விளக்கம்
சென்னை: எஸ்பிஐ-யின் ஏடிஎம்களில் குறைவான பண இருப்பு உள்ளதாக தகவல்கள வெளியாகிய நிலையில், எஸ்பிஐயே இதுகுறித்து விளக்கம் ஒன்றினை தந்துள்ளது. என்ன அது?
எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதுதான்: "ஏப்ரல் 8-ந்தேதியன்று, ஒரு குறிப்பிட்ட மாடல் ஏ.டி.எம். ஒன்றில் பண இருப்பு குறைவாக இருப்பதை எமது வங்கிக் கிளைகளுள் ஒன்று அடையாளம் கண்டது.

ஏடிஎம்: அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஏப்ரல் 6-ம் தேதி இரவு மற்றும் 7-ம் தேதி அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் முகப்பு கதவில் அங்கீகாரம் அளிக்கப்படாத ஊடுருவலை 2, 3 நபர்கள் அடங்கிய ஒரு கும்பல் செய்திருப்பது சி.சி.டி.வி. பதிவுகளின் மூலம் தெரிய வந்தது.
அந்த மோசடிக்காரர்கள், ஏ.டி.எம். வெண்டாரின் உரிமையாளரது நம்பகமான ஆவணங்களை அனுமதியின்றி பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் புகுந்து ஏ.டி.எம். ரொக்கப்பணத்தை வழங்கும் வடிவமைப்பை மாற்றியிருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கு பிற வங்கிகளின் பல்வேறு டெபிட் கார்டுகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக எந்திரம் கூடுதலாக பணத்தை வினியோகிக்கும் விளைவு ஏற்பட்டிருந்தது.
மோசடிகள்: 7-ம் தேதி காலை நேரத்தில் இன்னும் ஒரு ஏ.டி.எம்.-யிலும் இதே போன்ற மோசடி முறையை பயன்படுத்தி குறைவான தொகையில் பண மோசடிக்கான முயற்சி செய்யப்பட்டிருப்பதையுமம் நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம். இத்தகைய மோசடி முயற்சிகள் நிகழாமல் தடுப்பதற்காக எமது அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டுப்பாடு அம்சங்களை புகுத்தினோம்.
அனுமதியில்லாமல் பாதுகாப்பான ஆவணங்களது அணுகு வசதியை பயன்படுத்தினாலும் கூட ஏ.டி.எம். வடிவமைப்புகளை மாற்ற இயலாதவாறு பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம்.
நம்பாதீங்க: இச்சம்பவம் குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து விஷமிகள் பரப்பக்கூடிய வதந்திகளை நம்ப வேண்டாம் . உண்மையான தகவல்களை மட்டும் பின்பற்றுமாறு பொதுமக்களையும், எமது வாடிக்கையாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்" என்று தன்னுடைய விளக்கத்தில் வங்கி தெரிவித்திருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications