2 கேஸ் சிலிண்டர் இருக்கா? ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமா? இந்த மெசேஜ் வந்திருக்கா? என்னாச்சு
சென்னை: கேஸ் சிலிண்டரை கஸ்டமர்கள், வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய புதிய நடவடிக்கையை ஆயில் கம்பெனிகள் எடுத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் தரப்பில் மிகுந்த குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றும், பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
வீடுகளுக்கு 1 இணைப்பு, 2 இணைப்புகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில், 2 கேஸ் சிலிண்டர் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள், சிலிண்டர் காலியாவதற்கு முன்பே, இன்னொரு சிலிண்டரை புக் செய்து வாங்கி கொள்ளலாம். ஆனால், ஒரே ஒரு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள், சிலிண்டர் முடிந்தபிறகுதான் வாங்க முடியும்.

12 சிலிண்டர்களுக்கு மானியம்
மத்திய அரசு வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது. வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, "அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் காஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது.. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்" என்று இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மெசேஜ் அனுப்பப்படுவதாக தகவல்கள் பரவி பரபரப்பை தந்து வருகின்றன.
15 சமையல் கேஸ் சிலிண்டர்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டுமானால், அதற்கான காரணத்தை விளக்கி கேஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" என்றார்.
குழப்பம், அதிருப்தி, அதிர்ச்சி
இதன்காரணமாக, ஒரு ஆண்டுக்கு 15 கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்த துவங்கிவிட்டது..
பொதுமக்கள் இதுகுறித்து கூறும்போது, "திடீரென, 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்களுக்கு, அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று சொன்னால் எப்படி? ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும்போதும், அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தையும் கேட்டால் எப்படி?
வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று சொல்வதால், பலர் பாதிக்கப்படலாம்.. அதனால், ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும்போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்" என்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications