கவனிச்சீங்களா? சென்னையில் திடீரென அதிகரித்த மர்ம காய்ச்சல்? இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கவனம்
சென்னை: சென்னையில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இதன் அறிகுறிகள் பலருக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. சென்னையில் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய மழை மற்றும் குளிர்ந்த வெப்பநிலையைத் தொடர்ந்து RSV மற்றும் Covid-19 உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக சென்னை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கான வார்டுகள் கிட்டத்தட்ட 80% நிரம்பியுள்ளன.

பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம். டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் அதிகரிக்கும் அபாயங்கள் உள்ளதாகவும் எச்சரித்து உள்ளனர். காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தடுப்பூசிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னையில் இருக்கும் மக்கள் இடையே திடீரென காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. அதீத காலநிலை மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது ஒரு வாரம் நல்ல மழை. மீண்டும் கடும் வெயில். பின் மீண்டும் மழை. பகல் முழுக்க கடும் வெயில்.. இரவில் நல்ல மழை என்று வானிலை மாறி மாறி வருகிறது.
மோசமான பாதிப்பு: இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.
சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 1 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 1 வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் செல்கிறாரக்ள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை.
பலரும் இது கொரோனாவாக இருக்குமோ என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது கொரோனாவாக இருக்க வாய்ப்பு குறைவு. அதை போன்ற அறிகுறிகள் கொண்ட காலநிலை காய்ச்சல்கள் ஆக இருக்கலாம்.
பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு,
சளி,
இருமல்,
அதிக காய்ச்சல்,
உடல்வலி,
தலைவலி,
தும்மல்,
மூக்கு அடைப்பு ,
தொண்டை புண்,
கண்களில் நீர் வடிதல்,
மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல்
சுவை இழப்பு, வாசனை இழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர்கள், கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இந்தியா முழுவதும் பரவலாக இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அதனால்தான் தற்போது காய்ச்சல் ; அதிகரிப்பதாக தெரிவித்து உள்ளன, மருத்துவமனைகளுக்கு 30-40 சதவிகித கேஸ்கள் இப்படித்தான் வருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை.
நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் சில நாட்களுக்கு காலத்திற்கு நீடிக்கும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இருமல், சளி மற்றும் குமட்டல் கேஸ்களுக்கு மத்தியில் கண்மூடித்தனமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதாவது ஆண்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications