முந்தா நாள்தான் பாஜகவோட கூட்டணி வைத்த கட்சி.. இரு நாட்களில் கரைந்து காணாமல் போனது
சென்னை: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த இரண்டே நாட்களில் ஒரு கட்சி கரைந்து காணாமல் போயிருக்கிறதே தெரியுமா?
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என ஒரு படத்தில் கவுண்டமணி வசனம் பேசுவார். அது 100க்கு 100 உண்மை என அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் நாளில் என்னென்ன நடக்க போகுதோ தெரியவில்லை.

அந்த வகையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதாவது அவர் திரைப்படங்களில் உச்சத்தில் இருக்கும் போதே கட்சியை தொடங்கினார். அதிமுக, திமுக தலைமைக்கு நெருக்கமானவராகவும் இருந்தார்.
இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தென்காசி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வென்றனர். அதன் பிறகு சரத்குமாருக்கு தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றி இல்லை. இதையடுத்து அதிமுக பிளவுப்பட்ட போது கூட மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்திவந்தார்.
இந்த நிலையில் சில அமைதியாக இருந்த நிலையில் திடீரென 2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராவேன் என்றார். ஒருமுறை தனது கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என 2026 ல் தெரிய வரும். தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்.
150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ம் ஆண்டு என்னை முதலமைச்சர் ஆக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். திமுகவுக்கு உழைத்ததற்கு என்னை கருணாநிதி ராஜ்யசபா எம்பியாக்கி அழகு பார்த்தார்.
ஆனால் அதிமுகவுக்கு உழைத்த என்னை கருவேப்பில்லை போல் தூக்கி எறிந்துவிட்டார்கள் என சரத்குமார் விமர்சித்திருந்தார். அதுபோல் தனது மாமியாரின் ஆசையும் தான் தமிழகத்தின் முதல்வராவதுதான் என்றார். மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
சரத்குமார் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தென் தமிழகத்தில் அவரது சமூகத்திற்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இதனால் அவர் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென சரத்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க போவதாக சரத்குமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கூட சரத்குமார் தனது நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் திடீரென நடுராத்திரி 2 மணிக்கு அவருக்கு ஒன்று தோன்றியுள்ளது. அதாவது தமது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டால் என்ன என தோன்றியது. இதையடுத்து தனது விருப்பத்தை அண்ணாமலையிடம் தெரிவித்துள்ளார் (காலையில்தான்). அவரும் ஒப்புக் கொள்ள, பிரஸ் மீட் நடத்தி முடிவை அறிவித்துவிட்டனர்.
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில், சரத்குமாருக்கு கட்சியை நடத்த பணம் வேண்டும், அது போல் தேர்தலில் போட்டியிடவும் பணம் வேண்டும். இதற்காக சொந்த காசும் போட முடியாது, எனவே அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டால் அங்கு ஒரு பதவி கிடைக்கும். பிறகு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும். மத்திய அமைச்சரவையில் கூட இடம் பெற வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவர் தனது கட்சியை இணைத்திருப்பார். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டதட்ட12 ஆண்டுகளாக அவருக்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்கவில்லை என்பதால் அவர் இப்படி கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்திருக்கலாம். இவ்வாறு அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications