தேனி கோர்ட் வாசலில்..இப்பதான் மூச்சு விட்டாரு நடிகர் வையாபாரி.. அதுக்குள்ள? மதுரைன்னாலே பாசம்.. செம
சென்னை: கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்கப்பட்டு, ஒருவழியாக மெல்ல வெளியே வந்திருக்கும் நடிகர் வையாபுரி, தன்னுடைய ஆசை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் என்றாலே அதில் கவனிக்கப்படும் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவர், பிரபல நடிகர் வையாபுரி.. ஆனால், ஒருமுறை மதுரை பிரச்சாரத்தில் இவர் மீது ஒரு கேஸ் போட்டுவிட்டார்கள்.

அதாவது, கடந்த 2014-ல் தேனியில் பிரச்சாரம் செய்யும்போது, சில பெண்கள் இவருக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். அப்போது, ஆரத்தி எடுத்தவர்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக, போடி நகர் போலீஸ் நிலையத்தில் போடி பறக்கும்படை பிரிவு தாசில்தார் குணசேகரன் என்பவர் புகார் தந்திருந்தார்.
கோர்ட்டில் வழக்கு: ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் 100 ரூபாய் பணம் வைத்து வையாபுரி தந்துவிட்டதாக புகாரில் சொல்லியிருந்தார். போடி ஒருங்கிணைந்த குற்றவியல் கோர்ட்டில் வழக்கும் நடந்தது. வையாபுரிக்கு சம்மனும் அனுப்பினார்கள்.. கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த கேஸ் நடந்தது.. 2022-ம் ஆண்டுதான், வழக்கின் இறுதி விசாரணை நடந்ததது. விசாரணையில் வையாபுரியும் பங்குபெற்றார்...
இறுதியில், நடிகர் வையாபுரி குற்றவாளி இல்லை என்று கோர்ட் தீர்ப்பளித்து, அவரை விடுதலையும் செய்து உத்தரவிட்டது.. இப்படி ஒரு தீர்ப்பை கேட்டதுமே, கோர்ட் வளாகத்திலேயே நிம்மதி பெருச்சுமூச்சு விட்டார் வையாபுரி.
இதோ இப்போது எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய போவதாக சொல்கிறார்.. மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வையாபுரி கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஹீரோ சான்ஸ்: அரசியலை பொறுத்தவரை வில்லன்கள் காமெடியனாகவும், காமெடியன்கள், வில்லன் மற்றும் ஹீரோக்களாகவும் ஆகி வருகிறார்கள்.. இப்போது நான் வில்லனாக நடித்து வருகிறேன்.. ஹீரோயினுக்கு அப்பா போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் சினிமாவுக்குள் வருகிறார்கள்.. அதனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோவாக நடிப்பேன்..
எம்பி தேர்தலின்போது சூட்டிங் இல்லாமல் இருந்து, வாய்ப்பு வழங்கப்பட்டால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஒரே கட்சி ஒரே கொள்கை கொண்டது அதிமுக.. என்னுடைய பிரசாரம் பிற கட்சிகளை வசைபாடுவதாக இருக்காது... மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்வேன்..
மதுரை தேனி: பாசக்கார ஊர் என்றால் அது நம்ம மதுரை தான். நான் பிறந்த சொந்த ஊர், மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன்... தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள்.. எனவே, அதை பற்றி நான் பேசினால் சரியாக இருக்காது... நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிடாதீங்க" என்றார் வையாபுரி.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications