அதிமுக எம்பி சி.வி.சண்முகம் எப்படி இருக்கிறார்.. அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட தகவல்
சென்னை: அதிமுக ராஜ்யசபா எம்பி சி.வி.சண்முகம் நெஞ்சு வலி காரணமாக நேற்று முன் தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் எப்படி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று முன் தினம் திண்டிவனத்திலிருந்து சென்னை வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவரை மருத்துவர்கள் நேற்று இரவு வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்தனர்.
அண்மையில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவி நீககம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை கூறுகையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அட்மிட் ஆகவில்லை. வழக்கமான ரெகுலர் செக்கப்பிற்காக மட்டுமே அவர் அப்பல்லோவுக்கு வந்தார். மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன












Click it and Unblock the Notifications