சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறை சென்ற பின்பும் கை கழுவுறது ஏன்? டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறை சென்றதற்கு பின்பும் கை கழுவுறது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கிளீனிக்கில் குறை மாவு உணவு முறைப்பரிந்துரை பெற வந்தவர் பரிந்துரையை பெற்றதும் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார். "சார்.. நீங்க குறை மாவு உணவு பற்றி சொல்றீங்க. ஆனா எங்க குடும்ப மருத்துவர்ல இருந்து நிறைய பேர் இதை ஏத்துக்க மாட்டேங்குறாங்களே சார்" என்றார்.

கடைசி பேஷண்ட்

கடைசி பேஷண்ட்

அவர்தான் கடைசி பேஷண்ட் என்பதாலும் சின்சியர் டயட் ஃபாலோயர் என்பதாலும் அவரை மீண்டும் அமர்த்தி இந்த விளக்கத்தை ஆரம்பித்தேன் . (இந்தப் பதிவில் உள்ள நுணுக்கமான தகவல் விளக்கங்களை பதிவின் தேவைக்காக இப்போது இணைத்துள்ளேன்)
"சகோ... உட்காருங்க.. ஒரு புதிய மருத்துவ சித்தாந்தம் / உணவு சார் கொள்கை / மருத்துவ முறை போன்றவை மருத்துவ உலகில் பரவி வேர்விட்டு வளர்வதற்கு ஒரு நூற்றாண்டாவது ஆகும்..எனவே பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்."

ஒரு நூற்றாண்டா

ஒரு நூற்றாண்டா


"ஒரு நூற்றாண்டா? என்ன சார் சொல்றீங்க?" "ஆமா... ஒரு திடீர் மாற்றத்துக்கு மனித மனசு அத்தனை சீக்கிரம் ஒத்துவராது. நமது பழைய கற்பிதங்கள், முன்னோர் வாய்ச்சொல், சமுதாயத்தின் ஏச்சு பேச்சு இவற்றையெல்லாம் தாண்டி ஒரு புதிய அறிவு / சிந்தனை வெளியே வர பல ஆண்டுகாலம் ஆகும். நீங்க தொடர்ந்து ஏசி ரூம்ல தூங்கி பழகிட்டீங்கனு வச்சுக்கோங்க.. திடீர்னு இனிமே ஏசி கிடையாது என்று கூறினாலோ.. அதற்கு பல உண்மையான காரணங்கள் இருந்தாலும் சரியே..
நமது மனம் அந்த மாற்றத்தை உடனே ஏற்காது.

யாரு அவர்

யாரு அவர்

இதற்கு SEMMELWEISS REFLEX" னு பேரு. இந்த செம்மல்வெய்ஸ் யாரு தெரியுமா??? " "தெரியாது சார்" "இன்னைக்கு கொரோனா தொற்று பரவிக் கிட்ருக்கும் போது உலகமே கைய சோப் போட்டு கழுவுங்க.. கழுவுங்கனு கதறுதுல்ல.. உலகத்துக்கே கை கழுவ முதன் முதலில் கத்துக் கொடுத்து போதிச்சவர் அவர் தான்- டாக்டர் . ஃபிலிப் செம்மல் வெய்ஸ். 19ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த மனுசன்.

மகப்பேறு மருத்துவ துறை

மகப்பேறு மருத்துவ துறை

மகப்பேறு மருத்துவத் துறைல பட்டம் வாங்கி
1844ஆம் ஆண்டு வியன்னாவுல ஒரு மருத்துவமனைல வேலைக்கு சேர்ந்தார்.. அப்ப ஐரோப்பாவுல குழந்தை பிறந்த பிறகு முதல் 42 நாட்களுக்குள்ள காய்ச்சல் வந்து தாய்மார்கள் அதிகமா இறந்துட்ருந்தாங்க.. இதுல வெய்ஸ் என்ன நோட் பண்ணாருண்ணா.. வீட்டுல நர்ஸ்கள் டெலிவரி பண்ணா மரணம் அடையுற தாய்மார்களை விடவும் சில மடங்கு அதிகமா மருத்துவமனைகள்ல மரணம் அடைஞ்சாங்க..

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

அவருக்கு ஏதோ ஒன்னு புலப்பட்டுச்சு.. இது குறித்து இன்னும் ஆராய்ச்சி பண்ணலாம்னு நினைக்கும் போது அவரது சீஃப் அதுக்கு சம்மதிக்கல. இருந்தாலும் மறைமுகமா ஒரு ஆராய்ச்சி நடத்துறாரு. அதுல அந்த ஆஸ்பத்திரில ரெண்டு பகுதிகள்ல மகப்பேறு சிகிச்சை வழங்கப்பட்டு வர்றத பாக்குறாரு. முதல் டிவிசன்ல மருத்துவ மாணவர்கள் பிரசவம் பாக்குறாங்க.
ரெண்டாவது டிவிசன்ல நர்ஸ்ங்க பிரசவம் பாக்குறாங்க.

பிரசவ மரணங்கள்

பிரசவ மரணங்கள்

ரெண்டாவது டிவிசன விட முதல் டிவிசன்ல இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மரணங்கள் சம்பவிக்கிறத நோட் பண்றாரு. பிணவறைல இருந்து இறந்து போன தாய்மார்கள் பிணக்கூறாய்வு செய்து விட்டு அப்படியே அவர்கள் நேராக மகப்பேறு துறைக்கு வந்து பிரசவம் பார்ப்பது தான் காரணமாக இருக்கும் என்று முடிவுக்கு வர்றாரு. (இது நடக்கிறது 1848 ல. இப்ப இதையெல்லாம் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. அப்போ இவ்வளவு முன்னேறிய மருத்துவ துறை கிடையாது.
ஏன்? இன்னும் தொற்றுகளுக்கு காரணம் கிருமிகள் தான் என்பதையே மருத்துவ உலகம் கண்டறியாமல் இருந்தது.
பின்னாளில் லூயிஸ் பாஸ்சர் தான் வந்து கிருமித்தொற்றுக் கொள்கையை பிரகடணப்படுத்தினார்).

தீர்வு

தீர்வு

இப்போது ஒரு தீர்வை அவர் முன்வைக்கிறாரு.. அது என்னன்னா மகப்பேறு துறைக்குள் பிரசவம் பார்க்க நுழையும் ஒவ்வொருவரும் கட்டாயம் க்ளோரினுடன் கலந்த சுண்ணாம்புக் கரைசலில் கைகளை சுத்தமாக கழுவி விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்பதே.. இதை செய்ய ஆரம்பித்த அடுத்த சில நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. நூற்றுக்கு 18.27 பேர் மரணமடைந்து வந்த நிலையில் கைகழுவ ஆரம்பித்த பிறகு வெறும் 1.27 ஆக மரணங்கள் குறைந்தது.

முத்தாய்ப்பு

முத்தாய்ப்பு

இதில் இன்னும் முத்தாய்ப்பாக மார்ச் மற்றும் ஆகஸ்ட் 1848 ஆம் ஆண்டு எந்தப் பெண்ணும் மரணமடையவில்லை.
இப்படி ஒரு சிறப்பான ஆராய்ச்சி செய்தவரை உடனே ஆரத்தழுவி கவுரவித்ததா மருத்துவ உலகம்.. இல்லை என்பதே பரிதாபம். அவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு வியன்னாவை விட்டு பெஸ்ட் எனும் நகருக்கு ஓடச்செய்தது.
அவர் கூறிய அந்த மாற்றத்தை ஒரு சிலரைத் தவிர யாரும் ஏற்க முன்வரவில்லை. பெஸ்ட் நகரில் உள்ள புனித ரோச்சஸ் மருத்துவமனையில் பணிபுரியத் துவங்கினார்.

பிரசவ காலம்

பிரசவ காலம்

அப்போது மீண்டும் பின் பிரசவ காலத்தில் தாய்கள் மரணமடைவது அந்த மருத்துவமனையில் அதிகமானது
உடனே தாமதிக்காமல் அனைவரையும் கைகளை க்ளோரின் கலந்த சுண்ணாம்புக்கரைசலில் கையைக் கழுவச்செய்தார். உடனே மரண விகிதம் 0.85% ஆக குறைந்தது. இவரை துரத்தி அடித்த வியன்னாவிலோ அப்போதும் மரண விகிதம் 10-15% என்று இருந்தது.
இந்த சாதனையை கவுரவிக்கும் பொருட்டு
பெஸ்ட் பல்கலைக்கழகம் அவரை மகப்பேறு துறை தலைவராக நியமித்தது.

5 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

அதற்கடுத்த ஐந்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் வெய்ஸின் யோசனையைக் கடைபிடித்து மரண விகிதங்கள் சிறப்பாகக் குறைந்தன. 1861ஆம் ஆண்டு அந்த ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தையும் வைத்து "ETIOLOGY , CONCEPT, PROPHYLAXIS OF CHILD BED FEVER" என்ற நூலை எழுதி பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வெளியிடுகிறார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு நேரெதிராக இந்த மாற்றத்தை அதாவது கை கழுவி விட்டு பிரசவம் பாருங்கள் என்று கூறியதை
ஐரோப்பாவில் உள்ள எந்த நாட்டைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்களும் சட்டை செய்யவில்லை.

நொந்து போன ஆராய்ச்சி மருத்துவர்

நொந்து போன ஆராய்ச்சி மருத்துவர்

இதனால் நொந்து நூடுல்ஸான மனுசன் 1865 ஆண்டு புத்தி பேதழித்துப் போய் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு அங்கு டார்ச்ச்ர் செய்யப்பட்டதில் 14 நாட்களில் மரணமடைந்தார். அவர் இறந்த இருபது வருடங்களுக்குப் பிறகு லூயிஸ் பாஸ்சர் கிருமித்தொற்றுக் கொள்கையை வெற்றிகரமாக எடுத்துரைக்கிறார். அதற்குப்பிறகு வந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சைச்துறையில் கார்பாலிக் அமிலம் எனும் ஃபீனாலை வைத்து கட்டாயம் அறுவை சிகிச்சை உபகரணங்களை கழுவ வேண்டும் என்ற கொள்கையை கூறி வெற்றியும் பெற்றார்.

செம்மல் வெய்ஸ்

செம்மல் வெய்ஸ்

இதன் மூலம் மீண்டும் செம்மல்வெய்ஸின் பெயரை மருத்துவ உலகம் நியாபகப்படுத்திப் பார்த்து அவர் இறந்த பிறகு அவருக்கான கவுரவத்தை வழங்கியது. இன்று உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் தொடங்கி சாப்பிடும் முன்பு , கழிப்பறைக்கு பின்பு நாம் அனைவரும் சோப் போட்டு கை கழுவுகிறோம் என்றால் அதற்குக் காரணமானவர்- செம்மல் வெய்ஸ். அவர் கூறிய அந்த கருத்தை மருத்துவ உலகம் முழுவதுமாக ஏற்க அரை நூற்றாண்டு காலம் ஆனது. எனவே எந்த ஒரு புது சிந்தனையும் மருத்துவ முறையும் பாதையும் ஒரு நாளில் ஒரே வருடத்தில் உருவாகாது. சிறிது சிறிதாகவே வளர்ச்சி அடையும். அது போலவே குறை மாவு உணவு முறை குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக உலகம் மாறிக்கொண்டு இருக்கின்றது.

மருத்துவ உலகம் ஏற்குமா?

மருத்துவ உலகம் ஏற்குமா?

உலகம் முழுவதும் மாறி மருத்துவ உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் போது நாம் இருப்போமா? என்பது தெரியாது. எனவே நாம் தொடர்ந்து குறை மாவு உணவு முறையை கடைபிடித்து மருத்துவ உலகம் நம்மை உற்று நோக்கும் படி செய்யலாம். இதன் மூலம் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது..." என்று முடித்தேன் உலக கை கழுவும் தினத்தில் இந்தப் பதிவை வெளியிடுவதில் மகிழ்ச்சி. உண்மை ஒருநாள் வெல்லும். அது வெல்லும் போது நாம் இருப்போமா மாட்டோமா என்பது தெரியாது.
இருந்தாலும் அது வெல்வதற்கு தேவையான ஏதோ ஒரு துரும்பையேனும் நாம் கிள்ளிப்போட்டிருக்கிறோம் என்பதே வெற்றி. இவ்வாறு தனது போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+