Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் அரசின் மாடல் பள்ளிகளை பற்றி தெரியுமா? ஐஐடி போல் மிரள வைக்கும் வசதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசின் மாடல் பள்ளிகளை பற்றி தெரியுமா? ஐஐடி போல் அற்புதமான மற்றும் வியக்க வைக்கும் வசதிகளுடன் மாவட்டம் தோறும் அரசு மாடல் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் மிகவும் டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்களே தகுதித்தேர்வின் அடிப்படையில் 11ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு சேர்க்கப்படுகிறாரக்ள்.

தமிழகத்தில் ஆர்வமும் திறமையும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் பிற தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 சேர்ந்த, 'டாப்பர்' மாணவர்கள் மட்டும், மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுகிறாரகள். அரசு மாதிரி பள்ளிகளில், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே இலக்காக வைத்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

Do you know about government model schools in Tamil Nadu Facilities as awesome as IITs

மாநிலம் முழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களில் மிகவும் பிரபலமான ஆசிரியர்கள் மாதிரி பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு உயர்தரமான வகுப்பறை, தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.இந்த பள்ளிகளில் சேர அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களே மாதிரி பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள்..

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 240 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் 120 மாணவர்களும் 120 மாணவிகளும் இத்தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இதன்படி மொத்தம், 2,000 மாணவ - மாணவியர் மாதிரி பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதி தரமான முறையில் வழங்கப்படுகிறது..

மேலும், அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கவே இந்த மாதிரி பள்ளிகளை தொடங்கி உள்ளது.. எப்படி ஐஐடிக்கள் இயங்குகிறதோ அந்த பாணியில் இந்த பள்ளிக்கூடங்கள் இயங்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.. இந்த மாதிரி அரசு பள்ளிகளில் சேரும் 2000 மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யக்கூடும். சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை மெருகேற்றி இணை கல்விச் செயல்களை மேம்படுத்தும் முயற்சி நடக்கிறது., ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் இப்பள்ளியில் இருக்கிறது.

இதேபோல் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் தவிர்த்து NTSE தேசிய திறனறிவுத்தேர்வு, NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டுகள் மற்றும் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்கு உரிய தகுதியானவர்களாக நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பள்ளியை பற்றி சுபாஷ் என்ற நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு ஒன்றை பார்ப்போம்.. நேற்று ஆதார் எடுக்க ஒரு பேமிலி வந்தாங்க.. அவங்ககூட பேசுறப்ப அவங்க பையன் கன்னியாகுமரி நாவல்காடு மாடல் ஸ்கூல்ல படிக்குறதா சொன்னாங்க.அது என்ன ஸ்கூல்னு கேட்டப்ப அது அரசு நடத்துற பள்ளிக்கூடம். 11ம் வகுப்பு 12ம் வகுப்பு மட்டும் நடக்கும்னு சொன்னாங்க. டீடெயிலா கேட்டப்ப, ஒவ்வொரு அரசு பள்ளிலயும் SSLCல டாப் 5 மார்க் எடுக்குற மாணவர்களை இந்த ஸ்கூல்ல சேர்க்க முடியுமாம். அவங்களை கணிதம்,கம்ப்யூட்டர் சயின்ஸ் என என விருப்பப்படி பிரிச்சிடுவாங்களாம். அவங்களுக்கு 11th std ஆரம்பிக்குறப்பவே பயாலஜின்னா NEET, கம்ப்யூட்டர்னா JEE கோச்சிங் ஸ்டார்ட் பண்ணிடுறாங்களாம்.

அவங்களுக்கு அந்த 2 வருசமும் எல்லாமே அரசு செலவுதான். கைக்காசுன்னு எதுவுமே தேவை இல்லை. நோட்டு, புக்கு, யூனிபார்ம், சாப்பாடு,ஹாஸ்டல் பீஸ் எல்லாமே ப்ரீ தான். சாப்பாடு அவ்ளோ தரமா இருக்குதாம். புதன், ஞாயிறு அசைவம் மற்ற நாள் சைவ சாப்பாடு. தினமும் பாதாம் பால் எல்லாம் வேற கொடுக்குறாங்களாம் .தினமும் காலைல 5 மணிக்கு எழுப்பி விட்டு படிக்க வைப்பாங்களாம். இதுல சேருற 90% மாணவர்களோட பெற்றோருக்கு JEE ன்னா என்னன்னு கூட தெரியாது அதனால வேணாம் என்று சொல்லிருக்காங்க.

அவர்களை கன்னியாகுமரி கலெக்டர் நேர்ல கூப்பிட்டு பேசி JEE நல்லா படிச்சிட்டா IIT, NITன்னு பெரிய யூனிவர்சிட்டில படிச்சி பெரிய ஆளா வந்துருவாங்க நம்பி சேருங்கன்னு பேசி சேர்த்தாங்களாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் மாதிரி பெரிய பண்டிகைகளுக்கு மட்டும் தான் லீவு கொடுப்பாங்களாம் மற்ற லீவுக்கெல்லாம் அங்க இருந்தே தான் படிக்கணுமாம். இப்போ சில மாணவர்களை செலக்ட் பண்ணி JEE/ NEET இல்லாம வேற சில எக்ஸாம்க்கும் டிரைனிங் கொடுக்குறாங்களாம்.

முக்கியமாக வெளிநாடுகளில் இருக்குற பெரிய யூனிவர்சிட்டில சேருறதுக்கான எக்ஸாம்ஸ்க்கான டிரைனிங் கொடுக்குறாங்களாம். இந்த மாதிரி எக்ஸாம்ஸ் எழுதுறதுக்கு போற வர்ற செலவுகளையும் தமிழ்நாடு அரசு பாத்துக்குமாம். இந்த மாதிரி பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்துலயும் இருக்குதாம். ஒரு மாவட்டத்துல இருக்குற மாணவர்களை கேம்ப் ன்னு சொல்லி 2 மாதம் வேற மாவட்டத்துல இருக்குற மாதிரி பள்ளிகளுக்கும் கூட்டி போவாங்களாம். இந்த வருசத்துல இருந்து 8th std ல டாப் 5 மார்க் எடுத்தவங்களை வெச்சு 9th ல இருந்தே இந்த கோச்சிங்க் ஸ்டார்ட் பண்றாங்களாம். இதெல்லாம் கேக்கவே நல்லா இருந்துச்சு. இதுல JEE பாஸாகி வர்ற பையனோட அடுத்த தலைமுறையே மேல வந்துடும்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+