100 ரூபாய் போதும்.. ஜாம்ஜாம்ன்னு இருக்கலாம்.. அருமையான ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.. மத்திய அரசு செம்ம
சென்னை: வெறும் 100 ரூபாயில் முதலீடு செய்து, நல்ல வட்டியை பெற முடியுமா? இதைத்தான் மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. அந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்துமே பரவலாக மக்களின் ஆதரவை பெற்றவை.. இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுபவை.. பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும் நிறைந்தவை.

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டங்கள், முதலீட்டாளர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டவை. ஏராளமான அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது, தொடர் வைப்பு நிதி திட்டமும் ஒன்றாகும்.
ED எனப்படும் ரிக்கெரிங் டெபாசிட் அதாவது, தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அதற்கு பெயர்.. ரெக்கரிங் டெபாசிட் எனப்படுவது தொடர் வைப்பு நிதியாகும். அதாவது, ஒரு தொகையை நீண்ட கால சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதாகும்... இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு, மாதத்திற்கு 100 ரூபாயிலிருந்து தொடங்குகிறது என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியே.. அதேசமயம், முதலீடு செய்யும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
சேமிப்பு திட்டம்: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் கணிசமான தொகையாக, வட்டி விகிதத்துடன் சேர்த்து, லாபத்தையும் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஒரு வயது வந்தவர், 3 பெரியவர்கள் வரை சேர்ந்து இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில், ஜாயிண்ட் அக்கவுண்ட்டை தொடங்கலாம். இதைதவிர, ஒரு பாதுகாவலர், ஒரு மைனர் அல்லது பலவீனமான மனநிலையுள்ள நபர் சார்பாக ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.. அதேபோல, 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தன்னுடைய சொந்த பெயரிலும் கணக்கு தொடங்கலாம். ஆக, இதில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம்.
பொதுத்துறை வங்கிகள்: பொதுத்துறை வங்கிகள் முதல், சில தனியார் நிதி நிறுவனங்கள் வரை, இந்த தொடர் வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களில் (அதாவது 60 மாதங்களில்) முதிர்ச்சியடையும்.. இதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து அடுத்த 5 வருடங்களுக்கு அந்த நபர் சேமிப்பை தொடரலாம்.

தபால் நிலையத்தின் தொடர் வைப்பு தொகையில் வருடத்துக்கு 5.8 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது.. இந்த வட்டி விகிதமானது, 1 ஜனவரி 2023 முதல் பொருந்தும்... அத்துடன் வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது. 100 ரூபாயில் இருந்து முதலீட்டை தொடங்கினால், 5 வருடங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படுகிறது.
வருமானம்: உதாரணத்துக்கு, இந்த RD திட்டத்தில் மாதம் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடங்களில் ரூ 3.52 லட்சம் கிடைக்கும். கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்தத் தொகை ரூ.8.32 லட்சமாக இருக்கும்.. இந்த திட்டத்தில் சிறந்த வருமானத்தை பெறுவதுடன், முதலீடு செய்த பணமும் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர், இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications