Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலமுள்ளவர்கள் அறிய வேண்டியது.. பொட்டல் வரி, டிஎஸ்எல்ஆர் பட்டா என்றால் என்ன? பெயிரா தந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டா வகைகளில் ஏடி கண்டிசன் பட்டா, நில ஒப்படை பட்டா , டிஎஸ்எல்ஆர் பட்டா என்றால் என்ன தெரியுமா? வரி விதிப்பில் விதிக்கப்படும் பொட்டல் வரி என்றால் என்ன? இவைகளின் பயன்பாடுகள் என்னென்ன என்பது குறித்து, விழிப்புணர்வு பதிவு ஒன்றை பெயிரா வெளியிட்டுள்ளது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனரும், தேசியத் தலைவருமான டாக்டர் ஹென்றி ஆறுமுகம் இவைகள் குறித்து விரிவாகவும் அதில் கூறியிருக்கிறார்.

கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தோருக்கும், பொது மக்களுக்கும் பட்டா குறித்த தகவல்களை விழிப்புணர்வு பதிவாக தன்னுடைய FAIRA முகநூல் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில் ஒரு பதிவை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் உள்ளதாவது:

Patta vacant land tax Pottal vari

அதென்ன பொட்டல் வரி

தமிழ்நாட்டில் பெரும்பாலான பொதுமக்களுக்கு வீட்டுமனை பொட்டல் வரி என்கின்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.. ஆனால், அதனைக் குறித்து புரிதல் இல்லாதது குறித்து எனது கைபேசிக்கு வந்த அழைப்புகள் மூலம் எனக்கு தெரிய வந்தது.

பொட்டல் என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம். அதாவது புல்பூண்டுகள் கூட முளைக்காத புழுதி நிரம்பிய மிகப்பெரிய திறந்தவெளி தரிசு நிலத்தை தான் நாம் பொட்டல் நிலம் அல்லது பொட்டல் காடு என்று அழைக்கின்றோம். பொட்டல் என்னும் சொல்லானது சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது.

உதாரணமாக சங்க கால நூலான சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மன்னரின் ஆணைப்படி கோவலனின் தலை வெட்டுண்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம் மதுரை மாடக்குளம் அருகே உள்ளது. இந்த இடம் இன்றளவும் கோவலன் பொட்டல் என அழைக்கப்படுகிறது.

மதுரை புறநகர் பகுதிகள்

இன்றும்கூட, தமிழகத்தின் பல பகுதிகளில் பொட்டல் என்கின்ற வார்த்தை வட்டார வழக்கு சொற்களாக புழக்கத்திலும் - பழக்கத்திலும் வழக்கத்திலும், இருந்து வருகிறது. மேலும் மதுரை மாநகரானது மாநகராட்சி என்கின்ற அந்தஸ்தில் இருந்தாலும், மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் இன்றளவும் கிராமங்களைப் போன்றே பொட்டல் நிலங்களாகவே இருந்து வருகின்றன.

நெற்கதிர்களை போரடிக்கவும், ஊரின் பொது நிகழ்வுகளை நடத்தவும் மட்டுமே முன்பெல்லாம் இதுபோன்ற பொட்டல் நிலங்கள் பயன்பட்டு வந்தன. இன்றும் கூட வருவாய்த்துறை ஆவணங்களில் பொட்டல் நில வரி என்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தற்பொழுது விவசாய பணிகளில் நவீன இயந்திரங்களின் வருகையின் காரணமாக பொட்டல் நிலங்களில் நெற்கதிர்களை போர் அடிக்கும் சூழல் வெகுவாக குறைந்த காரணத்தினால் ஜல்லிக்கட்டு, விளையாட்டுகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் என பொது நிகழ்வுகள் நடைபெறும் இடமாக விளங்குகிறது.

TSLR PATTA = Town Survey Land Record என்ற டிஎஸ்எல்ஆர் பட்டா

அதேபோல பட்டாக்களில் பல வகைகள் உண்டு.. இதில், 3 வகைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.. முதலில் டிஎஸ்எல்ஆர் பட்டா என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கிராம விவசாய நிலத்தை பட்டா என்ற ஆவணம் மூலம் பெறப்படுகிறதென்றால், கிராமப்புற விவசாய நிலத்தை தவிர நகரத்தில் உள்ள நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம் பற்றிய விவரக்குறிப்புகள் உள்ள TSLR Town Survey Land Record மூலம் பட்டாவாக வழங்கப்படுகிறது.

நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நிலங்களை துல்லியமாக சர்வே செய்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். டிஎஸ்எல்ஆர் பட்டா எடுக்க நகரம் பிளாக் மற்றும் வார்டு போன்ற பிரிவுகளில் இருக்கும்.

கிராமப்புற, நகர பகுதிகளிலுள்ள பட்டாவிலுள்ள வித்தியாசம் என்ன தெரியும்? நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது. அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும். ஆனால் கிராம பகுதி சர்வேகளில் தோராயமாக ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.

AD Assignment Land(Adi Dravidar) என்ற ஏடி கண்டிசன் பட்டா

உபரியாக இருக்கும் நிலத்தை மனைகளாக பிரித்து நிலமில்லாத பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படுவது ஏடி கண்டிசன் பட்டா எனப்படும்.

இந்த கண்டிசன் பட்டாவில் உள்ள நிலத்தை குப்பிட்ட காலத்திற்கு யாருக்கும் விற்க கூடாது போன்ற கண்டிசங்கள் இருக்கும். இதில் பட்டா பெறுபவரின் புகைப்படமும் தனி வட்டாசிரியரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும். இது மேனுவல் பட்டாவாக இருக்கும். இதில் பெண்களின் பெயரில்தான் பட்டா வழங்கப்படும். மேலும் விவசாயம் செய்வதற்கு நிலமில்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒதுக்கப்படும்.

Assignment patta என்ற நில ஒப்படை பட்டா

வீட்டு மனைகள், விவசாய நிலங்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து பிரிவினருக்கும் அரசு இலவசமாக ஒப்படைப்பதே, நில ஒப்படை பட்டா என்பார்கள்

குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், மூன்றாம் பால் இனத்தவர்கள் போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும் அதனை நில ஒப்படை பட்டா என்பர்.

இவைகளிலும் குறிப்பிட்ட வருடத்துக்குள் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் வருடங்கள் நிறைவடைந்த பிறகும் வருவாய் துறையில் தடையின்மை சான்றிதழ் பெற்றுத்தான் பிறருக்கு விற்பனை செய்யும் வகையில் நிபந்தனை இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்" என்று அந்த பதிவில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+