ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. மன்சூர் அலிகானுக்கு பலாத்கார வழக்கில் 7 வருட சிறை? உண்மையில் நடந்தது என்ன?
சென்னை; நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதாக செய்தி ஒன்று சுற்றி வருகிறது. இதற்கு பின் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது தொடர்பாக மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாகி உள்ளது.நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அதன்படி நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில்.. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.

குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சுக்குத்தான் நெட்டிசன்கள் கடுமை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விமர்சனம்: அவரின் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து போஸ்டுகளை போட்டு வருகின்றன. இதை விட மோசமான பேச்சை பார்க்க முடியும். அவரை திரையுலகினர் மொத்தமாக புறக்கணிக்க வேண்டும். இது மிக மிக தவறான செயல்.
அவரை இனி எந்த படங்களிலும் நடிக்க வைக்க கூடாது. முக்கியமாக லியோ படத்தில் அவரை நடிக்க விட கூடாது. எல்சியூ யுனிவர்சில் அவரின் கதை இதோடு முடிய வேண்டும். இனிமேல் அவரை பயன்படுத்தவே கூடாது என்று நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் வைத்துள்ளனர்.
பலாத்கார வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதாக செய்தி ஒன்று சுற்றி வருகிறது. இதற்கு பின் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி 1996ல் சினேகா சர்மா என்ற 23 வயது பெண்ணை நடிகர் மன்சூர் அலிகான் பலாத்காரம் செய்தார் என்பதே குற்றச்சாட்டு. 1998லேயே இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. சினேகா சர்மா மன்சூர் அலிகான் உதவியாளர் ஆவார். அந்த பெண்ணுக்கு அப்போது 23 வயதுதான். தன்னை அடிக்கடி மோசமாக சீண்டிய மன்சூர் அலிகான்.. ஒருநாள் ஜூஸில் மாத்திரை கொடுத்து.. பலாத்காரம் செய்ததாக மன்சூர் அலிகான் மீது சினேகா குற்றச்சாட்டு வைத்தார்.
சினேகா குற்றச்சாட்டு; இந்த நிலையில் மன்சூர் அலிகான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் சினேகா சர்மா கூறி இருந்தார். 1998ல் இது தொடர்பாக சினேகா வழக்கும் தொடுத்தார். அப்போது சினேகாவிற்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. இதையடுத்து மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மன்சூர் அலிகான் 7 வருடம் சிறை தண்டனை பெற்றது உண்மை. 2001ல் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் அவருக்கு சிறை தண்டனை கொடுத்தது. அதோடு 3 லட்சம் அபராதம் விதித்தது. ஆனால் இதில் அவர் நீண்ட காலம் சிறையில் இருக்கவில்லை. அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுய் செய்தார். அதில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கப்பட்டு.. சினேகா சர்மாவிற்கு 3.5 லட்சம் மற்றும் பெண் குழந்தைக்கு 7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம்: இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்தான் இந்த வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. 1995-ல் சினேகா சர்மாவிற்கு எதிராக சிவசுரேஷ் என்பவர் தொடுத்த வழக்கு ஒன்றை மன்சூர் அலிகான் வழக்கறிஞர் கண்டுபிடித்தார். அதில்.. தனக்கும் சினேகா சர்மாவிற்கும் குழந்தை பிறந்து விட்டது. எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று சுரேஷ் தொடுத்த மனுவாகும் அது.
இவர்கள் இருவருக்கும் 24.8.1994-ல் திருமணம் நடந்ததையும் கூட மன்சூர் அலிகான் வழக்கறிஞர் கண்டுபிடித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீண்டும் வழக்கு தொடுத்தார்.
பெண் மீது வழக்கு ; பெண் மீது தொடுத்த வழக்கில்.. சினேகா சர்மா தான் ஒரு விர்ஜின் என்று எனக்கு எதிரான வழக்கில் கூறினார். ஆனால் அவருக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது. அவர் வைத்த வாதம் தவறு. பொய். அதேபோல் எனக்கு எதிரான அவரின் வழக்கும் பொய். என் மீது அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகா சர்மா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தார். இதில் சினேகா கடைசி வரை பதில் அனுப்பவில்லை. வழக்கில் ஆஜராகவுள்ளது. இதையடுத்து மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க சினேகா சர்மாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் அந்த தொகையை கொடுத்தாரா என்பது இதுவரை வெளியாகவில்லை.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications