ஜெயலலிதா போயஸ் வீட்டில் உள்ள "ஸ்பெஷல் பெல்".. அதை மட்டும் அழுத்தினா.. அவ்வளவுதான்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்றாட வாழ்க்கை குறித்து சுவாரசிய விவரங்கள் சில வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியான ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதில் சசிகலா, கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக இந்த அறிக்கை சசிகலாவை நேரடியாக குற்றஞ்சாட்டி உள்ளது. முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது.
ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படி ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மூலம் வெளியான நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அன்றாட வாழ்க்கை குறித்து சுவாரசிய விவரங்கள் சில வெளியாகி உள்ளன.
இரவே எடுத்துவைக்கும் ஜெயலலிதா: அதன்படி ஜெயலலிதா தனது வீட்டில் இருந்தால் இரவே மறுநாளுக்கான உடைகளை எடுத்துவைத்துவிடுவார். மறுநாள் என்ன போட வேண்டும் என்று முதல் நாளே உடைகளை எடுத்து வைத்து விடுவார். முதல் நாளே அவரே எல்லா துணிகளையும் தேர்வு செய்வார்.

தான் அணிய வேண்டியதை அவரே தேர்வு செய்வார். பின்னர் அயர்ன் செய்பவரிடம் கொடுத்து அயர்ன் செய்து தயாராக வைப்பார்.
4 மணி நேரம் மட்டும் தூக்கம் - 8 மணி வரை தூக்கம்: 12 மணி வரை மறுநாளுக்கான வேலைகளை திட்டமிடுவார். அதாவது என்ன செய்ய வேண்டும். என்ன பேச வேண்டும். மறுநாள் திட்டம் என்ன என்று திட்டம் போடுவார். அதன்பின் 12 மணிக்கு தூங்க செல்லும் நபர் 4 மணிக்கு எழுந்து கொள்வார்.
எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் எந்த பணியும் இல்லை என்றால் 8 மணி வரை கூட தூங்குவார். ஆனால் மிக அபூர்வமாகவே இப்படி அவர் தூங்குவார்.
பெல் இருக்கும்: அவர் வீட்டில் ஒரு பெல் இருக்கும். அவர் காலையில் எழுந்தவுடன் அந்த பெல் அடிக்கும். அந்த பெல் அடித்தால் ஊழியர்கள் எல்லாம் குளித்துவிட்டு ரெடியாகி இருக்க வேண்டும். உணவும் ரெடியாகி இருக்க வேண்டும்.

எல்லா ஊழியர்களும் குளித்துவிட்டுத்தான் தன்னை பார்க்க வேண்டும். பணிகளை செய்ய வேண்டும். அவர் அடிக்கும் இந்த பெல்லிற்காக தினமும் அவரின் வீட்டில் ஊழியர்கள் கண் கொத்தி பாம்பு போல உஷாராகி இருப்பார்கள்.
ஜெயலலிதா காலையில் 6 மணிக்கு காபி குடிப்பார். அதன்பின் காலை சாப்பிட்டவுடன் மீண்டும் காபி குடிப்பார். பின்னர் செல்லும் வழியில் காரில் ஒரு முறை காபி குடிப்பார். இப்படி அடிக்கடி காபி குடிப்பார்.
அவர் தூக்கத்தை கட்டுப்படுத்தியது எல்லாம் இந்த காபி மூலம்தான் என்கிறார்கள் அவரின் போயஸ் கார்டனில் பணியாற்றிய ஊழியர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications