UGC-NET- "நெட்"தேர்வை திடீரென ரத்து செய்த மத்திய அரசு... எதற்காக இந்த தேர்வு? யார் எல்லாம் எழுதியது?
சென்னை: மத்திய அரசு தேர்வு முகமை நடத்திய "நெட்" - UGC-NET தேர்வுகள் நேற்று நடைபெற்றது. ஆனால் நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சைபர் கிரைம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் நேற்று நடைபெற்ற நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஜூலை 8-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு மத்திய அரசு திடீரென நேற்று நடைபெற்ற நெட் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடுகள் அம்பலமானதால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும்; நீட் தேர்வு முறையையே கைவிட வேண்டும் என குரல்களும் போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் நெட் தேர்வு நடைபெற்ற மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது. சரி அது என்ன "நெட்" தேர்வு?
நாடு முழுவதும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக (Asst. Prof) பணிபுரிவதற்கு NET அல்லது SET ஆகிய தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். நெட் தேர்வு எழுதி பாஸ் செய்தால் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி- Junion Research Fellow மூலமாக மாத நிதி உதவி பெற்று முனைவர் பட்டம் பெறலாம். இதற்காகவும் நெட் தேர்வு எழுதப்படுகிறது.
PG படித்தவர்கள் - முதுகலை, முது அறிவியல், முது வணிகவியல் அதாவது MA, MSc, MCom ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருந்தால் நெட் தேர்வு எழுதலாம். இந்த படிப்புகளில் இறுதியாண்டு படிப்பவர்களும் கூட நெட் தேர்வு எழுதலாம். தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தாலும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்போரும் கூட நெட் தேர்வு எழுதலாம்.
நெட் தேர்வானது கலைப் பாடங்கள், மொழிப் பாடங்கள், சமூக அறிவியல், கணினி அறிவியல் பயன்பாடு, மின்னணு அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் எழுதலாம்.
நடப்பாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 11 லட்சம் பேர் நெட் தேர்வு எழுதினர். வழக்கமாக கணிணி மூலமாக நெட் தேர்வு நடத்தப்படும். ஆனால் இம்முறை OMR சீட் மூலம் நெட் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications