விவாகரத்து கோரும் ஜெயம் ரவி! மறுக்கும் ஆர்த்தி ரவி! குறுக்கே வந்து ஆதரவு தெரிவிக்கும் பிரபல நடிகை
சென்னை: நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து அறிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கைக்கு பிரபலம் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் யார் என்பது தெரியுமா? இதன் மூலம் ஜெயம் ரவியின் விவாகரத்து கோரிக்கை நீர்த்து போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் எடிட்டராக இருந்தவர் மோகன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள். அதில் முதல் மகன் ராஜா, சிறந்த இயக்குநர் ஆவார். இளைய மகன்தான் ஜெயம் ரவி. தனது தம்பி ரவியை வைத்து ராஜா இயக்கிய படம்தான் ஜெயம். அதில் ரவிக்கு நல்லதொரு ரீச் கிடைத்ததால் அன்று முதல் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வருகிறார்.

தனது அண்ணனின் இயக்கத்தில் சில படங்களிலும் ஜெயம் ரவி நடித்திருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற சீரியல், சினிமா தயாரிப்பாளரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆரவ், அர்யன் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆரவ், தனது தந்தையுடன் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி- ஆர்த்தி இடையே ஏதோ பிரச்சினை நடப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கு தீனிப் போடும் வகையில் ஆர்த்தியும், தனது சமூகவலைதளங்களில் ரவியுடனான புகைப்படங்களை நீக்கினார்.
நெருப்பில்லாமல் புகையுமா என்பதற்கேற்ப மெதுவாக புகைந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அதாவது செப்டம்பர் 9ஆம் தேதி, ஜெயம் ரவி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இது நான் அவசரத்தில் எடுத்த முடிவல்ல, என்னை சுற்றியுள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிக்கைக்கு அவருடைய மனைவி ஆர்த்தி, எதிர்வினையாற்றியுள்ளார். அதில் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். விவாகரத்து குறித்து என்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக ரவி எடுத்த முடிவு இது. நான் அவரை சந்திக்க பலமுறை முயன்றும் அது முடியவில்லை. என் கணவர் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அது எனக்கும் என் குழந்தைகளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போல் பொதுவெளியில் எந்த கருத்தையும் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. எனினும் நான் அமைதியாக இருந்தால் என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்றாகிவிடும் என்பதால் நான் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அந்த நீளமான அறிக்கையின் சாராம்சம், ஆர்த்திக்கு ரவியுடன் வாழ விருப்பம் போல!
எல்லாவற்றிற்கும் மேல் ஆர்த்தியின் இன்ஸ்டாவில் வெளியான அறிக்கைக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் லைக் போட்டுள்ளார். அதாவது அவர் இந்த விவகாரத்தில் ஆர்த்தியின் பக்கம் நிற்கிறார். ஆர்த்தியின் தாய் விஜயலட்சுமியும் குஷ்புவும் நெருக்கமான தோழிகள். குஷ்புவை ஆர்த்தி ஆன்டி என்றும் , ரவியோ அக்கா என்றும் அழைப்பார்கள்.
குஷ்புவின் நெருங்கிய வட்டாரம் என ஒன்று உள்ளது. அந்த வட்டத்திற்குள் ஆர்த்தியின் அம்மாவுக்கும் இடம் உண்டு. பொதுவாகவே கணவன்- மனைவி விவாகரத்து பெறுவதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது. சாதாரண குடும்பங்களிலேயே அனுசரித்து செல்லுங்கள் என்றுதான் வீட்டு பெரியவர்களும் வழக்கறிஞர்களும் கூறுவார்கள்.
அந்த வகையில் தான் சிறிய வயதில் இருந்து பார்த்து வளர்ந்த ஆர்த்தியின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாவது அவர்களது நலம் விரும்பியான குஷ்புவுக்கு வருத்தம் இதனாலேயே ஆர்த்தியின் நிலைப்பாட்டுக்கு குஷ்பு லைக் போட்டிருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு வேளை ஜெயம் ரவியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் குஷ்பு பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஆர்த்தி மீதான தவறான புரிதலையும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்வார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications