கொத்து கொத்து கொத்தமல்லி.. ஜஸ்ட் இதை மட்டும் குடித்தாலே உடல் எடை சல்லுனு குறையுதாம்.. ஆச்சரிய மல்லி
சென்னை: கொத்தமல்லி இலையும் சரி, கொத்தமல்லி விதையும் சரி, இரண்டுமே தவிர்க்க முடியாத மருத்துவ பொருட்கள்.. வெறும் வாசனை பொருட்களாக இவைகளை பயன்படுத்தாமல், ஆரோக்கியம் தழைக்க எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
வைட்டமின்கள் A, C, K உள்ளிட்டவைகளும், ஏகப்பட்ட இரும்பு சத்துக்களும் நிறைந்தவை இந்த கொத்தமல்லி.. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள் இப்படி ஏகப்பட்டவை நிறைந்திருக்கின்றன.. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லியை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்..

தலைவலி, மூக்கடைப்பு, ஜலதோஷம் இருந்தாலும், கொத்தமல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.. சர்க்கரை நோயை தவிர்க்கவேண்டுமானால், கொத்தமல்லி இலையை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு: மாதவிலக்கு பிரச்சனை இருப்பவர்கள், கொத்தமல்லி இலையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். கொத்தமல்லி, ஈரலை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது..
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த கொத்தமல்லி. இதனால், உடல் எடையும் குறைகிறது. தலைமுடி வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும் கொத்தமல்லி துணை புரிகிறது.. அதிலும் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தாலே, உடலிலுள்ள கழிவுகள் நீங்க, உடல் எடை குறையும்... முடி உதிர்வை தடுத்து நிறுத்தும்.. சருமத்தை பொலிவாக்கும்..
கொத்தமல்லி நீர்: ஒரு கிண்ணத்தில், கப் நீரில் கொத்தமல்லி விதைகளை இரவெல்லாம் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில், விதையில்லாமல் நீரை மட்டும் குடித்தாலே போதும். வெறும் கொத்தமல்லியை கழுவி, அந்த இலையை மென்று தின்றாலே அஜீரண கோளாறுகள் நீங்குமாம்.
இதே கொத்தமல்லி விதைகளை, டீ போல தயாரித்து குடித்து வந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.. கொத்தமல்லியை சுத்தமாக கழுவி இரவெல்லாம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரையும் குடிக்கலாம். அல்லது இதில் எலுமிச்சம் பழம் பிழிந்து குடித்தால், இரட்டிப்பு பலன் தரும். வாயு தொந்தரவுகளும் நீங்கும்.
கொத்தமல்லி இலையை உணவாக இல்லாமல், சருமத்துக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.. இந்த இலைகளை அரைத்து முகத்தில் பூசி வந்தால், தோல் சுருக்கம் நீங்கும்.. கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்திலுள்ள தழும்புகள் மறையும்..
கருவளையங்கள்: கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள், கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேல் பற்று போல போட்டு வந்தால், கருவளையங்கள் நீங்குவதுடன், கண்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். அல்லது கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஆறவைத்து கண்களை கழுவினாலும், இதே பலன்கள் கிடைக்கும்.
மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டது.. அதனால், இன்சுலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அலர்ஜி, கண் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. ரத்த சோகை நோயையும் தீர்த்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்துக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக இந்த மல்லி விதை உள்ளது..
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த விதையை பயன்படுத்தலாம்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை.
கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்து கொண்டால், பல பிரச்சனைகைளை இந்த பொடி தீர்த்துவிடும்.. அதேபோல, இந்த பொடியில் டீ போட்டு குடிக்கலாம்.. இந்த பொயை சுக்குப்பொடியுடன் சேர்த்து டீ போட்டுக் குடித்தால், வாய்வு தொல்லை விலகும்.. வயிறு, நுரையீல், பிரச்சனைகள் அத்தனையும் பறந்துவிடும். வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவற்றுக்கும் தீர்வு கிடைக்கிறது. உடலிலுள்ள நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
நீரிழிவு மருந்துகள்: ஆனால், ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்கள், இந்த கொத்தமல்லியை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. காரணம், ரத்தத்தில் இருந்து சர்க்கரையை நீக்க உதவும் நொதி செயல்பாடுகளை இந்த விதைகள் ஊக்குவிப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார்கள். எனவே, இதை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செய்வது நல்லது.
தனியா டீ தயாரிப்பது எப்படி: இந்த தனியாவில் டீ போட்டு குடிக்கலாம்.. 20 அல்லது தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதும்.. உடலிலுள்ள வாயுக்களை அகற்றுகிறது.. பித்தம் நீங்கும். ஹார்மோன் சமநிலையாகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த விதையை பயன்படுத்தலாம்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications