Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டைதாரர்களே..உங்க ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதா? ரேசன் கார்டில் பெயர் சேர்க்கணுமா? சிம்பிள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் ரேஷன் கார்டில், புதிய உறுப்பினரை சேர்க்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அல்லது ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அல்லது ரேஷன் கார்டே தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்கு காரணமே ரேஷன் அட்டைகள்தான்.

Do you know How to Add the Family members to Ration card and what are the Major Procedures

நலத்திட்டங்கள்: அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன. வங்கி கணக்கு தொடங்கவும், சமையல் எரிவாயு, இணைப்பு பெறவும், வாக்காளர் அடையாள அட்டை, கிரெட் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை பெறவும், இந்த ரேஷன் கார்டு முகவரிதான் அடிப்படை சான்றாக விளங்கி வருகிறது.

இத்தகைய முக்கிய ஆவணமான ரேஷன் கார்டினை, மாநில அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதேபோல, உங்கள் ரேஷன் கார்டுகளில், குடும்ப நபரின் பெயர் சேர்க்க வேண்டும் என்றாலோ அல்லது பெயரை நீக்க வேண்டும் என்றாலோ அதற்கும் இணையதளம் மூலமே வழியை காணலாம். உதாரணத்துக்கு பெயரை நீக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாள வேண்டும்:

இதுதான் மிக முக்கியம்: இதற்கு Death Certificate (இறப்பு சான்றிதழ்), Marriage Certificate (திருமண சான்றிதழ், Adoption Certificate (தத்தெடுப்பு சான்றிதழ்), Others Certificate (இதர சான்றிதழ்) போன்ற ஆவணங்கள் கட்டாயம்தேவை.

- முதலில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்.

- முதலில், "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "குடும்ப உறுப்பினர் நீக்க" என்பதை கிளிக் செய்ய வேண்டும்

- இப்போது தோன்றும் புதிய பக்கத்தில், பழைய ரேஷன் கார்டுடன் இணைந்துள்ள உங்கள் செல்போன் நம்பரை பதிவிட வேண்டும்

- பின்னர் உங்களது செல்போனுக்கு ஒரு ஒடிபி (OTP) வரும்.. அந்த நம்பரை பதிவிட்டு, "பதிவு செய்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது ரேஷன் அட்டையின் விவரங்கள் தெரிய வரும்.

- இப்போது இடதுபுறத்தில் "அட்டை பிறழ்வு" என்பதையும், பிறகு, "புதிய கோரிக்கைகள்" என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்

- இப்போது ஸ்கிரீனில் உங்களது ரேஷன் கார்டு எண் மற்றும் ரேஷன் கடையின் குறியீட்டு எண் போன்றவற்றை சரி பார்த்து "சேவையை தேர்ந்தெடுக்கவும்" என்பதில், "குடும்ப உறுப்பினர் நீக்க" என்பதை கிளிக் செய்யவும்.

- பின்னர் ஸ்கிரீனில் தோன்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து, நீக்கத்திற்கான காரணத்தை "காரணம்" என்ற கட்டத்தில் நிரப்பி, உரிய ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டும்

- "பதிவு செய்ய" என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் போதும்.. உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டுவிடும்.. இதற்கு பிறகு, ஒன்றிரண்டு நாட்களில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நீங்கள் கோரியுள்ள பெயர், ரேஷன் கார்டிலிருந்து நீக்கம் செய்யப்படும்.

கட்டாயம் தேவை: உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்டதுமே, "சான்றிதழ் பதிவிறக்கம்" என்ற வசதியை கிளிக் செய்து சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.. இந்த சான்றிதழை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது, இது கட்டாயம் தேவைப்படும்.

அதேபோல, புதிய உறுப்பினர்கள் பெயர்களை சேர்க்க வேண்டியிருக்கும்.. குறிப்பாக, பெண் உறுப்பினரின் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் சேர்க்கப்பட வேண்டிவரும்.. அதேபோல, குழந்தையின் பெயரை கட்டாயம் சேர்க்க சொல்கிறார்கள்.

குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டுமானால், குழந்தையின் தந்தையின் பெயர் மிகவும் அவசியம். ஒருவேளை குழந்தையின் பெயர் சேர்க்கப்பட வேண்டுமானால், முதலில் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயம் தயாராக வைத்திருக்க வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தேவைப்படும். அதற்கு பிறகே, ஆதார் அட்டையில் பெயரைப் பதிவு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்: இப்போது, உங்கள் விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்து, புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, இந்த இணைப்பை செய்யலாம்.

வெப்சைட்: ஒருவேளை ரேஷன் கார்டு தொலைந்து போய்விட்டால், ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, உங்களது ஐடி-யை பதிவு செய்ய வேண்டும். அப்போது, உங்கள் செல்போனுக்கு OTP ஒன்று வரும். அதை பதிவு செய்து TNPDS பக்கத்தினுள் நுழைந்து, அங்கு கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பித்தாலே, புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுவிடும்.

அதேபோல, அரசின் அனைத்து இ-சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

2 மாதங்கள்: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, அரசு இ-சேவை மையங்களில் 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவே தனியார் பொதுச் சேவை மையங்கள் என்றால், அதற்கேற்றால் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், விண்ணப்பித்த 20 நாட்களிலேயே ஒப்புதல் கிடைத்து விடும். அடுத்த 2 மாதங்களில் புது ரேஷன் கார்டும் கிடைத்து விடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+