மின்சார இணைப்பு.. புது இ.பி. கனெக்ஷன் வேணுமா? மின்துறையில் திடீர் சிக்கல்.. ஓடோடி வந்த மின்வாரியம்
சென்னை: புதிய மின் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்து வரும்நிலையில், புதிய புகார் ஒன்று கிளம்பி உள்ளது.. எனினும், இதுகுறித்த மின்வாரியம் நம்பிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கட்டண விகிதம் மாற்றம், மின் சாதனங்கள் இடமாற்றம் போன்றவற்றுக்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் காகித விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் முறை ஏற்கனவே, இருந்தது. ஆனால், இந்த முறையில், லஞ்சம் தாண்டவமாடியது.. லஞ்சம் தராதவர்களின் விண்ணப்பங்களும் திடீர் திடீரென மாயமாகின.

ஆன்லைன் வசதி: அதனால்தான் ஆன்லைனின் வசதி கொண்டு வரப்பட்டது.. www.tangedco.org என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மின்சார சேவைக்கு விண்ணப்பிக்கும் வசதி துவக்கப்பட்டது.. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது, புதிய மின் இணைப்புகளை வழங்கியும் வழங்குகிறது.
ஆனால், புது மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால், 30 நாட்கள் வரை காலதாமதம் ஆவதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இதை பரிசீலித்த மின்வாரியமும், சில திருத்தத்தை கொண்டு வந்து, அதற்கான வரைவு அறிக்கையையும் கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது.
அதாவது, நுகர்வோர்களுக்கு விண்ணப்பித்த 10 நாளைக்குள் புதிய மின் இணைப்பை வழங்க தாமதமாகுமானால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் விதம் நுகர்வோருக்கு மின்வாரியம் அபராதம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தது. மின்வாரியம் இவ்வாறு அறிவுறுத்தியும்கூட, மின் இணைப்பு தருவதில் தற்போதுவரை இழுபறி நீடிக்கிறதாம்..
புகார்கள்: விண்ணப்பதாரர்கள் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக மீண்டும் புகார்கள் எழுந்துள்ளன. அதாவது, ஆவணங்களின் நகலை அலுவலகத்திற்கு எடுத்து வருமாறு சொல்லி அலைக்கழிப்பதாகவும், வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து விட்டதாக சொன்னாலும்கூட, எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை, தாங்கள் சொல்லும் பிரவுசிங் சென்டரில் புதிதாக விண்ணப்பிக்குமாறும் சொல்கிறார்களாம்.
இந்த புகார்கள் தற்போது பரபரப்பை கிளப்பி வரும்நிலையில், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, "சேவைக்கு தாமதம் செய்வது தொடர்பாக, இணையத்தில் புகார் அளிக்கலாம்.. அதேபோல, உயரதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது எழுத்து பூர்வமாக புகார் அளித்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
தேவையான ஆவணங்கள்: சொத்து வரி ரசீது, விற்பனை ஒப்பந்தம் போன்ற அந்த சொத்து விண்ணப்பதாரருடையது தான் என்பதற்கான சான்று ஆதாரத்தின் நகல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டின் உரிமையாளராக இல்லை என்றால், வீட்டின் உரிமையாளரிடமிருந்து படிவம் 5 போன்று பெறப்பட்ட கடிதம் அல்லது விண்ணப்பதாரர் அந்த வீட்டில்தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றான படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும்...
விண்ணப்பதாருக்கு 112KW அதிகமாக மின் அளவு தேவை என்றால், அவர்கள் அதற்குரிய படிவங்களை ஸ்கேன் செய்து அதன் பிடிஎஃப்-ஐ சமர்ப்பிக்க வேண்டும். TANGEDCO இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications