வாஷிங் மெஷின் நீங்க யூஸ் பண்றீங்களா? வாஷிங்மெஷினை கிளீன் செய்ய இந்த 2 பொருள் போதுமே.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: வெறும் 2 பொருட்களை மட்டுமே வைத்து, நம்முடைய வாஷிங் மெஷினை நாம் சுத்தப்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
நம்முடைய வீட்டில் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் வாஷிங் மிஷின்.. இந்த மெஷினில் துணிகளை துவைத்து சுத்தப்படுத்துகிறோமே தவிர, வாஷிங் மெஷினை பலரும் சுத்தப்படுத்துவதில்லை..

துவைக்கப்பட்ட துணியிலுள்ள அழுக்கைகள் எல்லாம், இந்த மெஷினில்தான் தங்கிவிடும்.. எனவே, வாஷிங்மெஷினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், துர்நாற்றம் அதிகமாகி, வாஷிங்மெஷினும் சீக்கிமாகவே பழுதாகிவிடும்.
அதுவும் இல்லாமம்ல, வாஷிங்மெஷினில் இருக்கக்கூடிய அதிகப்படியான அழுக்குகள் பூஞ்சை தொற்றுகளையும் ஏற்படுத்திவிடும்.. இதனால், மெஷினில் துவைப்பவர்கள் சரும பிரச்சனைகளுக்கும் ஆளாக வேண்டியதிருக்கும்.
டிரையர்: இதற்கு முதலில் துணி துவைத்து முடித்தவுடன், அனைத்து துணிகளையும் மிஷினில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். டிரையருக்குள்ளேயே போட்டு வைக்க கூடாது.. துணியை வெளியே எடுத்தாலும், சிறிது நேரத்திற்கு டிரையர் உட்பட மிஷினை திறந்து வைக்க வேண்டும்.. அதாவது அதிலிருக்கும் ஈரப்பதம் ஓரளவுக்காவது காய வேண்டும்..
வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, வாஷிங் மெஷினை சுத்தம் செய்யலாம். எலுமிச்சம் பழம் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். எலுமிச்சம்பழத்தை வெட்டி, வாஷிங் மெஷின் டிரம்மில் வைத்துவிட்டால் போதும்.. அந்த மிஷினில் படிந்திருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்..
வினிகர்: அதேபோல, வினிகரை பயன்படுத்தியும் வாஷிங் மெஷினை சுத்தம் செய்யலாம்.. இதனுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து கொள்ளலாம்.. இந்த இரண்டையும் பயன்படுத்தும்போது, மிஷினில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்குகின்றன.. அத்துடன், துர்நாற்றம் நீங்கி கமகமவென வாசனையும் பரவும்..
அதேபோல, வாஷிங் மெஷினின் தட்டு உள்ளிட்டவகளை டூத் பேஸ்ட்களை வைத்து சுத்தம் செய்யலாம்.. ஒரு கப்பில் சிறிது நீர் எடுத்து, அதில் டூத் பேஸ்ட்டை கரைத்துகொண்டு, ஒரு பிரஷ்ஷை பயன்படுத்தே தேய்த்து கழுவலாம்.
அல்லது 1 லிட்டர் சுடுநீரில் 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்துகொண்டு, இந்த தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு துணியை அந்த தண்ணீரை தொட்டு, அழுக்குகள் உள்ள இடத்தை துடைக்கலாம்.
வெறும் மிஷின்: வாஷிங் மெஷினின் உட்புறம் பார்ப்பதற்கு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தாலும், உட்புறம் உள்ள பல ஓட்டைகள் மற்றும் வெடிப்புகள் மூலமாக, நோய்கள் வேகமாக பரவும்... அதனால் சில நாட்கள், வெறும் மெஷினை ஓட விட வேண்டும்.. அதுமட்டுமல்ல, நீர் வடிவிலான லிக்விட்டை பயன்படுத்துவதற்கு பதில், பவுடரையே பயன்படுத்தலாம்.. லிக்விட் வடிவிலான பொருட்களை பயன்படுத்தினால், அவைகள் மெஷினில் படிவதுடன், துர்நாற்றம், கறைகளையும் உண்டுபண்ணிவிடும் வாய்ப்புள்ளது.
துணி கவர்: அதேபோல, வாஷிங்மெஷினை கழுவி சுத்தம் செய்துவிட்டு, ஒரு ஸ்பாஞ் வைத்து எல்லா இடங்களிலும் துடைக்க வேண்டும். ஸ்பாஞ்சால் துடைத்து, ஈரம் முழுவதையும் எடுத்துவிட்டாலே போதும், பளிச்சென மாறிவிடும்.. அத்துடன், வாஷிங் மெஷினை எப்போதும் திறந்து வைத்திருப்பதைவிட, ஒரு கவர் போட்டு மூடி வைப்பது நல்லது..
காரணம், பெரும்பாலானோர் பாத்ரூம்களிலேயே வாஷிங் மெஷினை வைத்துவிடுவதால், தண்ணீர் மெஷினுக்குள் சென்றுவிட அதிக வாய்ப்புள்ளது... இதனால் மோட்டார் சேதமாகலாம்.. எனவே, உள்ளே தண்ணீர் வராமல் இருக்க துணியை பயன்படுத்தி மூடி வைத்தால் போதும். இதனால் வாஷிங் மெஷினுக்குள் எலிகள், கரப்பான் போன்றவையும் உள்ளே போகாமல் இருக்கும்.












Click it and Unblock the Notifications