இனி வீட்டிலிருந்தே நியாய விலைக் கடை திறந்திருக்கிறதானு பார்க்கலாமே! பொருட்களின் ஸ்டாக்கும் வருமே!
சென்னை: ரேஷன் கடைக்கு செல்லாமலேயே ரேஷன் கடை திறந்திருக்கிறதா இல்லையா என்பது குறித்து தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். இதற்காக ஒரு மொபைல் போன் இருந்தாலே போதுமே! தேவையில்லாமல் கால் கடக்க ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாமே!
தமிழகத்தில் நியாய விலை கடைகள் எனும் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ரேஷன் கடைகளில் மாதந்தோறும் கார்டுகளை கொண்டு வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். இதில் பெரும்பாலும் பெண்கள்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். பல நேரங்களில் ரேஷன் கடைக்கு சென்றாலும் அங்கு வரிசையில் காத்திருந்துவிட்டு தாங்கள் வாங்க வேண்டிய பொருள் ஸ்டாக் இல்லை என தெரிந்ததும் மீண்டும் வீட்டிற்கு ஏமாற்றத்துடன் வருகிறார்கள்.
இதையெல்லாம் போக்க தமிழக அரசு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கடை திறந்திருக்கிறதா, நமக்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருப்பு உள்ளதா போன்றதை மொபைல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் ரேஷன் கடையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டால் புகார் அளிக்கவும் முடியும்.
இதுகுறித்து டாப் இன்பார்மர் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நம்ம பகுதி ரேஷன் கடை திறந்திருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் எளிது. உங்களிடம் உள்ள மொபைல் போன் மூலம் எளிமையாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ரேஷன் கடைக்கு ஒரு மொபைல் நம்பரை கொடுத்திருப்பீர்கள்.
அந்த எண் உள்ள மொபைலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த செல்போனில் மெசேஜை ஓபன் செய்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். அடுத்த நொடியே உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா இல்லையா என்ற செய்தி உங்கள் செல்போன் எண்ணுக்கு வந்துவிடும்.












Click it and Unblock the Notifications