நில ஆவணங்கள்.. சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பது எப்படி?பத்திரத்தை பாதுகாக்க சின்ன சின்ன டிப்ஸ்
சென்னை: சொத்து பத்திரங்களை வாங்கினால் மட்டும் போதுமா? அதை முறையாக பதிவு செய்ய வேண்டும்.. பதிவகங்களில் பதிவு செய்தால் மட்டுமா? அதை எப்படி காக்க வேண்டும் தெரியுமா? இதோ குட்டி குட்டி டிப்ஸ்
ஒரு சொத்து உங்களுடையதுதான் என்பதை உங்களுக்கே எடுத்துரைக்க ஆதாரமாக இருக்கும் ஆவணம் சொத்து பத்திரங்கள்தான்.. தன்னுடைய வாழ்நாளில் எப்போதுமே கவனமாக இந்த சொத்து பத்திரங்களை அதன் உரிமையாளர்கள் கையாள வேண்டும்.

பத்திரப்பதிவு முடிந்தபிறகு, சம்பந்தப்பட்ட பதிவகம் சென்று பதிவு செய்யப்பட்ட பத்திரத்தினை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்... அதுமட்டுமல்ல, சில நாட்கள் கழித்து, உங்கள் பத்திரத்தின் பதிவு நம்பரை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு கொடுத்து, அதனை 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே உங்களிடமிருக்கும் ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.
முத்திரைத்தாள்: பதிவான பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் விற்ற நபரின் கையொப்பம், அவரது அடையாள அட்டை விவரங்கள், பதிவாளர் கையொப்பம், ஸ்கேன் செய்துகொண்ட விவரங்கள், குறைவான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதுகுறித்த விவரங்கள், போட்டோக்கள், சொத்தின் மதிப்பு சரி என்பதற்கான சான்றிதழ், ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட எண், ஆவணத்தின் மொத்தப் பக்கங்கள் என அனைத்தையும் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல, பத்திரத்தில், மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், போன்றவை பதிவு செய்வது அவசியம்..
அதுபோலவே, உரிமையாளரின் முழுப்பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, சொத்து விற்பவரின் பெயர், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்..
லேமினேஷன்: அதேபோல, சிதிலமடையாமல் சொத்து பத்திரங்களை பாதுகாக்க வேண்டும். பத்திரங்களை லேமினேஷன் செய்யக்கூடாது.. ஏனென்றால், ஆவணங்களின் நம்பகத்தன்மை போய்விடும் என்பதால், ஆவணங்களை தனித்தனியே பிரித்து வைப்பது நல்லது.
ஒரே இடத்தில் நீண்ட காலமாக பத்திரங்களை வைத்திருந்தாலும் பாழாகிவிடும்.. அவ்வப்போது எடுத்து தூசு தட்ட வேண்டியது அவசியம். முக்கியமாக மழை, குளிர் காலங்களில் ஈரப்பதம் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.. பேப்பர்களும் குளிர்ச்சிதன்மையால் பாழாகிவிடக்கூடும். அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதுபோன்ற நேரங்களில் பத்திரங்களை, ஒவ்வொன்றாக பிரித்து வெயிலில் காய வைக்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்வதை தவிர்க்கலாம்.
பாலிதீன் கவர்: ரப்பர் பேண்ட், கிளிப்புகளையும் போடாமல் வெறுமனே ஆவணங்களை ஒரு பாலித்தீன் கவரில் போட்டுவைத்தால் போதும். இதில் தண்ணீர் புகாது. அழுக்குகள் எளிதில் புகாது. சாதாரண ஃபைல்களில் வைத்தாலும், சொத்து பத்திரங்கள் பத்திரமாகவே இருக்கும்.. அதற்காக பாச்சா உருண்டை எனப்படும் ரசக்கற்பூரத்தை போட்டுவைக்கக்கூடாது. இதனாலும், பேப்பர்கள் சிதிலமடையலாம்.
ஒரிஜினல் ஆவணங்களை போலவே நகல் ஆவணங்களுக்கும் பாதுகாப்பு தந்து பத்திரப்படுத்த வேண்டும். இரண்டையும் ஒன்றாக இணைத்து வைக்கவும் கூடாது. ஜெராக்ஸ் தனியாகவும், ஒரிஜினல் தனியாகவும் வைப்பது நல்லது. பத்திரங்களை வேறு ஏதேனும் பொருட்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது.. அதேபோல, பத்திரங்களின் சர்வே எண், பத்திரப்பதிவு எண் போன்ற நம்பர்களை மனதில் வைத்து கொள்ளலாம்.. அல்லது வேறு எங்காவது எழுதி வைத்து கொள்ளலாம்..
சிட்டா, பட்டா: பத்திரங்கள் நம்மிடம் பத்திரமாக இருப்பதை போலவே, அரசு ஆவணங்களிலும் இருக்க வேண்டும்.. நம்முடைய பெயரிலேயே அந்த ஆவணங்கள் இருக்கின்றனவா என்பதையும் கண்காணித்து வர வேண்டும். பத்திரங்கள் தவிர பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற இதர ஆவணங்களையும் பத்திரப்படுத்துவதோடு சரிபார்த்தும் வர வேண்டும்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications