வேகமெடுக்கும் வடகிழக்கு பருவமழை.. மின் விபத்தை தவிர்க்க இந்த நம்பர் முக்கியம் மக்களே!
சென்னை: மழைக்காலங்களில் மின் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்தம், புயல் காலங்களில் நிறைய மழை பெய்யும். தற்போது சாதாரண மழைக்கே பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த மழை காலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை காட்டிலும் மின்சாரம் பாய்ந்து இறக்கும் நிகழ்வுகளே அதிகம் நிகழும். காரணம் பலத்த மழை பெய்தால் மின் வயர்கள் அறுந்து விழும் நிகழ்வு ஏற்படும். இதை அறியாமல் யாரேனும் காலை வைத்து மிதித்துவிட்டால் மின்சாரம் பாய்ந்து இறக்க நேரிடும்.
எனவே மழைக் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

*கீழே விழுந்த மின் கம்பிகள் அல்லது கம்பங்கள் அருகில் செல்லாமல் விலகி இருக்கவும்.
*அப்படி காணும் பட்சத்தில் எச்சரிக்கை அடையாளம் செய்து மின்னகம் எண் 94987 94987 என்ற எண்ணுக்கு அழைக்கவும்
*மின் கம்பம்/மின்மாற்றி/ பகிர்மான பெட்டி அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
*தரமற்ற பிவிசி வயரை கொண்டு வீட்டிலிருந்து அருகில் உள்ள கொட்டகைக்கோ அல்லது கழிவறைக்கோ கொண்டு செல்ல வேண்டாம்.
*மாடிகளில் துணி உலர வைக்கும் போது மின் கம்பி மேலேயும் அருகிலும் இல்லை என்பதை உள்ளதா என்பதை உறுதி செய்யவும்
இவ்வாறு மின்சார வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications