ஆதார் கார்டு வெச்சிருக்கீங்களா.. உங்க "ஆதார் அட்டை" தொலைஞ்சு போனால் என்ன செய்யணும்.. ரொம்பவே ஈஸி
சென்னை: உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? அப்படியானால் ஏதாவது பிரச்சனை வருமா? என்றெல்லாம் பயப்பட வேண்டாம்.. இழந்த ஆதார் கார்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்.. எப்படி தெரியுமா?
நம் நாட்டிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.
ஆதார் முக்கியம்: அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதாரமான, அடையாள ஆவணமாக உள்ளதுதான் இந்த ஆதார் கார்டுகள்.. எனினும், இந்த ஆதார் அட்டைகளை வைத்து, மோசடிகள் நடப்பதாக ஆங்காங்கே செய்திகள் வெளியாகி வருகின்றன..
ஒருவேளை நம்முடைய ஆதார் கார்டையும், யாராவது தவறாக பயன்படுத்தப்படலாமோ என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அப்படியானால் நம்முடைய செல்போனில் இருந்தே இந்த ஆதார் நம்பரை லாக் செய்யலாம். இணையத்திலும் சென்று லாக் செய்யலாம்.
எப்படி லாக் செய்வது: உங்கள் செல்போன் நம்பரில் இருந்து, GETOTP என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்கள் ஆதாரின் கடைசி 4 இலக்க நம்பர்களையும் பதிவிடவும். இதனை 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பிவிட வேண்டும்.
நீங்கள் இந்த எஸ்எம்எஸ்ஸை பதிவு செய்த பிறகு, உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க ஓடிபி வரும். இந்த ஓடிபி பெற்றவுடன், நீங்கள் மறுபடியும் உங்களது மொபைலில் இருந்து, LOCKUID இதனை தொடர்ந்து கடைசி நான்கு இலக்க ஆதார் எண், அதனை தொடர்ந்து நீங்கள் பெற்ற ஆறு இலக்க ஓடிபியையும் பதிவிட வேண்டும். இதனை இணையம் மூலமாகவும் லாக் செய்யலாம்.

அன்லாக் செய்வது எப்படி: உங்களது மொபைல் எண்ணில் இருந்து, இதற்கும் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். நீங்கள் GETOTP இதனை தொடர்ந்து, 6 இலக்க VID நம்பரையும் அனுப்ப வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க ஓடிபி வரும். அதன் பிறகு UNLOCKUID என டைப் செய்து தொடர்ந்து 6 இலக்க VID இதனை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த ஆறு இலக்க OTPயையும் பதிவிட்டு 1947 என்ற எண்னுக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
உங்களது மெசேஜினை பெற்ற பிறகு UIDAI உங்களது ஆதார் நம்பரை அன்லாக் செய்யும். இதற்காக உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட மெசேஜ் வந்துவிடும்.
எப்படி மீட்பது: ஒருவேளை உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், முதலில் அதை லாக் செய்துவிட்டாலே போதும்.. அதற்காக பதற்றமடைய தேவையில்லை.. செல்போன் மூலமாகவே அதை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருவேளை, உங்கள் பதிவு எண் (EID) அல்லது ஆதார் (UID) உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், ஆதார்பயன்பாட்டில் அல்லது uidai.gov.in இணையத்தில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றி தொலைந்த ஆதார் எண்ணை நீங்கள் பெறலாம்.
1. முதலில் uidai.gov.in என்ற இணையத்தில் உள்நுழைய வேண்டும்.
2. வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் கிடைக்கும் எனது ஆதார் டேப்பில் உள்ள ஆதார் சேவைகளின் கீழ் மீட்டெடுக்கப்பட்ட லாஸ்ட் யுஐடி / ஈஐடியைக் (Retrieve Lost UID/EID) கிளிக் செய்ய வேண்டும்.
4. அதில் உங்கள் முழு பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சலை உள்ளிடவும்.
5. கேப்ட்சாவை சரிபார்த்து சென்ட் OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. இப்போது உங்கள் மொபைலில் நீங்கள் பெற்ற ஆறு இலக்க OTP ஐ உள்ளிடவும்.
7. இறுதியாக எஸ்எம்எஸ் மூலம் உங்கள் மொபைலில் கோரப்பட்ட யுஐடி / ஈஐடி எண்ணை நீங்கள் பெறுவீர்கள். மேலும் உங்கள் ஈ-ஆதாரைப் பதிவிறக்க இதை பயன்படுத்தலாம்.
உங்கள் ஆதாரில் உங்கள் செல்போன் எண் பதிவு செய்யப்படவில்லையென்றால், நீங்கள் முதலில், ஆதார் வழங்கும் அல்லது கட்டாய ஆதார் தேவை உள்ள எந்தவொரு ஆன்லைன் சேவையையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதைப் புதுப்பிக்க வேண்டும்.
ரூ.50 கட்டணம்: உங்கள் மொபைல் எண்ணை ஆதார் மூலம் புதுப்பிக்க அல்லது பதிவு செய்ய, நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை பார்வையிட வேண்டும்.. மேலும், உங்கள் பயோமெட்ரிக் விவரங்களுடன் அதனை அங்கீகரிக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு உங்களிடம் ரூ .50 வசூலிக்கப்படும்.. அதற்கு வேறு எந்த ஆவண செயல்முறையும் தேவையில்லை.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications