நட்ராஜ் பென்சில் Vs அப்சரா! உங்கள் சாய்ஸ் எது? சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
சென்னை: சிறு வயதாக இருந்த போதிலிருந்தே நாம் நட்ராஜ், அப்சரா பென்சில்களை பயன்படுத்தியிருக்கிறோம். இந்த பென்சில்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தற்போது பார்க்கலாம். மேலும் தற்போது எந்த பென்சில் சிறந்தது என்பது குறித்தும் சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
பென்சிலை பயன்படுத்தாமல் யாரும் இருந்திருக்கவே முடியாது. அந்தளவுக்கு படிக்கும் குழந்தைகளுக்கும் ஓவியம் வரைவதற்கும் இது பயன்படுகிறது. சிறு குழந்தைகள் பேனாவில் எழுதினால், அதை திருத்த அழிக்க முடியாது என்பதால் சிறுவர்களுக்கு 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பென்சிலில் எழுத வைக்கிறார்கள்.

அடித்து அடித்து எழுதுவதற்கு பதிலாக அழித்து அழித்து எழுதினால், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். அந்த அழகை பார்த்துவிட்டு இனி தவறாக எழுதவே கூடாது என்ற எண்ணமும் வரும்.
அப்படி பள்ளிக்குச் செல்லும் பல குழந்தைகளுக்கு தற்போது நிறைய நிறுவனத்தின் பென்சில்கள் வந்துவிட்டாலும், பழைய காலத்தில் வந்த நட்ராஜ், அப்சரா பென்சில்களை யாராலும் மறக்க முடியாது. இந்த பென்சிலை கூட வாங்க முடியாத அளவுக்கு அன்று பல குடும்பங்கள் கஷ்டப்பட்ட காலமும் உண்டு.
பென்சில்களை ஓவியம் வரைவதற்கு கூட பயன்படுத்தலாம். இன்று எத்தனையோ பென்சில்கள் வந்துவிட்டாலும், அவற்றில் சிலவற்றில் மட்டும் அவ்வப்போது லெட்டுகள் உடைந்துவிடும், சீவினாலும் திரும்ப திரும்ப பென்சில் லெட் உடைந்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் அந்த நட்ராஜ், அப்சரா பென்சில்களில் இந்த பிரச்சினை இருக்காது. மேலும் இந்த பென்சிலில் எழுதினால் அச்சு அடித்தது போல் கருகருவென எழுத்துகள் அழகாக இருக்கும். இந்த பென்சில்களைத்தன் இன்றளவும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பென்சில்களை தயாரிப்பது யார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த இரு பென்சில்களையும் தயாரித்தது ஒரே நிறுவனம்தான். முதலில் நட்ராஜ் பென்சில்கள்தான் அதிகம் பயன்பாட்டில் இருந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு அப்சரா பென்சில் விற்பனைக்கு வந்தது. இதையடுத்து நட்ராஜை விட அப்சரா பென்சில்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
நட்ராஜ் பென்சிலை விட அப்சரா பென்சில் விலை அதிகம். ஆனாலும் அந்த பென்சில்களைத்தான் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த இரு பென்சில்களும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. எனினும் தரத்தில் ஒரு வித்தியாசம் இருப்பதால் பலர் அப்சரா பென்சில்களையே விரும்புகிறார்கள் என சொல்லப்படுகிறது.
இந்தியாவின் மிக பெரிய பென்சில் தயாரிப்பு நிறுவனம் ஹிந்துஸ்தான்தான். இந்த நிறுவனம் 1958ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பென்சில்கள் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications